முறையான சடங்குகளும், வழிமுறைகளும் கடைப்பிடிக்க முடியாத இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வணங்க கூடாது !

The rules for Worshiping Shiva Linga.

Update: 2021-09-13 01:04 GMT

நம்முடைய மரபுகளில் சிவனை வழிபடுவதற்கும், சிவலிங்கத்தை வழிபடுவதற்கும் சில வித்யாசங்கள் உண்டு. சிவலிங்கத்தை வீட்டில் அல்லது வேறு எங்கேனும் வைத்து வழிபடுகிற போது முறையாக வழிபட வேண்டும். முறையான சடங்குகளும், வழிமுறைகளும் கடைப்பிடிக்க முடியாத இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வணங்க கூடாது என்கிற நம்பிக்கையும் நம்மிடத்தில் உண்டு. சிவபெருமானை வழிபடுவதற்குரிய பொருட்கள் என சிலவை உண்டு.

இவற்றை கொண்டு வழிபடுவதன் மூலம் அவருடைய அருளை பரிபூரணமாக ஒருவர் பெற முடியும். உதாரணமாக, வில்வ இலை, குளிர்ந்த பால், சந்தனம், விபுதி போன்றவை அவரை வணங்க உகந்த பொருட்கள். உண்மையான பக்தி ஒன்றே சிவபெருமானை வணங்க போதுமானது என்ற போதும், இந்த பொருட்கள் அவருக்கு உகந்தது என கருதப்படுகிறது. அதேவேளையில் சிவபுராணத்தின் படி எவற்றையெல்லாம் சிவபெருமானுக்கு அர்பணிக்க கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதில் முதன்மையானது தாழம்பூ. ஒருமுறை சிவனின் திருவடி மற்றும் முடியை தேடி விஷ்ணு பெருமானும், பிரம்ம தேவரும் புறப்பட்ட போது. விஷ்ணுவால் கண்டறிய முடியவில்லை. அவர் தன் தோல்வியை ஒப்பு கொண்டார். ஆனால் பிரம்ம தேவர் தான் சிவபெருமானின் முடியை கண்டதாக பொய்யுரைத்த போது, அவருக்கு துணை நின்றது தாழம்பூ எனவே சிவபெருமானின் கோபத்திற்கு இருவருமே ஆளானார்கள். எனவே, தாழம்பூவை சிவபெருமானின் வழிபாட்டில் பயன்படுத்துவது இல்லை.

அடுத்து, துளசியை சிவபெருமானுக்கு அர்பணித்து வணங்குவதில்லை. காரணம், துளசியின் கணவரான ஜலந்தர் என்கிற அரக்கனை சிவபெருமான் வதைத்த போது, கலக்கமுற்ற துளசி தன் இலைகளால் சிவபெருமானை வழிபடக்கூடாது என சாபமிட்டதாக சில புராணக் குறிப்புகள் உண்டு.

அடுத்து மஞ்சள் மற்றும் குங்குமம் இது பெண் தன்மையின் குறியீடாகும். எனவே இவற்றை சிவலிங்கத்திற்கு பயன்படுத்துவது இல்லை. மேலும் சிவலிங்கத்தை வணங்குவதற்கு முன், ஒருவர் தூய்மையாக நீராடி, கங்கை நீர் இருப்பின் அதனை தன் மீது தெளித்து கொள்வது நல்லது. சிவலிங்கத்தின் மேல் புனிதமான நீர் விழுமாறு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் சிவலிங்கத்தை ஒரு போதும் தனிமையில் வைக்க கூடாது. உடன் கெளரி மற்றும் கணபதியின் திருவுருவம் இருப்பது கூடுதல் நன்மை தரும்.

Tags:    

Similar News