ஹரியும் சிவனும் ஒருங்கே அமைந்து அருள் வழங்கும் அதிசய சிதம்பரம்!

Update: 2021-12-02 00:30 GMT

சிதம்பரம் என்றாலே நடராஜ பெருமான் தான் அனைவர் நினைவில் வருவார். தில்லையில் கூத்தனாக இருக்கும் நடராஜர் தான் சிதம்பரத்தை ஆழ்பவர். ஆனால் இதிலிருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், சிதம்பரத்தில் குடி கொண்டிருக்கும் கோவிந்தராஜ பெருமாள். சிதம்பரத்தின் சிறப்பம்சங்கள் ஏராளம் உண்டு. சிதம்பர ரகசியம் தொடங்கி, பூகோள அடிப்படையில் அக்கோவிலின் முக்கியத்துவம் என நீளும் வரிசையில். சிதம்பரத்தின் கனகசபையின் முன் ஒருவர் நிற்கிற போதே ஒரே நேரத்தில் நடராஜ பெருமானையும், கோவிந்தராஜ பெருமானையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும் என்பதே அதன் சிறப்பம்சம்.

கோவிந்தராஜ பெருமாள் கோவிலை திருச்சித்திரக்கூடம் என்றும் அழைப்பர். இது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட இடமாகும். இது விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சிவனும் ஹரியும் ஒரே இடத்தில் இருக்கும் இந்த இடம் சிவனும் ஹரியும் ஒன்று எனும் தார்ப்பரியத்தை உணர்த்துவதாக உள்ளது. நடராஜர், மற்றும் கோவிந்தராஜர் இருவரும் ஒரே இடத்திலும் இருப்பதால் இரண்டு அரசர்கள் ஆண்ட இடம் என்கிற முக்கியத்துவமும் இவ்விடத்திற்கு உண்டு.

கோவிந்த ராஜரின் திருவுருவம் ஒரு காலத்தில் கோவில் வளாகத்திற்கு வெளியே இருந்ததாகவும் பின் குளோதுங்க சோழன் காலத்தில் கிருஷ்ணப்ப நாயக் எனும் மன்னர் மீண்டும் உள்ளே ஸ்தாபித்தார் என்றும் சொல்கின்றனர். ஆழ்வார்களும், குலசேகர ஆழ்வாரும் இந்த இடத்தை தில்லை சித்திரகூடம் என்றே விழித்துள்ளனர். இந்த கோவிலில் பகவானுக்கு ஆறுகால பூஜை நடைபெறுகிறது. உஷ்டகால பூஜை காலை 7 மணிக்கும், காலசாந்தி பூஜை 8 மணியளவிலும், உச்சிகாலம் 12 மணியளவில் பின்பு மாலை 6 மணி, இரண்டாம் கால பூஜை மாலை 7 மணி மற்றும் அர்தஜாம பூஜை இரவு 10 மணிக்கும் செய்யப்படுகிறது.

அலங்காரம், நெய்வேத்தியம் மற்றும் ஆரத்தியுடன் கூடிய வழிபாட்டில் நாதஸ்வரமும், மத்தளமும் முழங்குவது வழக்கம். பத்து நாள் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மற்றும் இங்கு நடைபெறும் கஜேந்திர மோக்‌ஷம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். பகவானுக்கு வேண்டி கொள்ளும் பக்தர்கள் திருமஞ்சனம் சாற்றி வஸ்திரம் அர்பணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்

. Image : TOI


Tags:    

Similar News