எள் இந்திய சமூகத்தில் மிக மதிப்பு வாய்த்த ஒரு தானியமாகும். திதி மற்றும் தர்ப்பணங்கள் போது உபயோகப்படுத்தும் இந்த எள்ளானது சிறந்த மருத்துவ குணங்களையும், கர்மவினைகளையும் ஆற்றலும் கொண்டது. 5000 வருடங்களுக்கு முன்பாகவே இந்த எள் பயிரிடப்பட்டதாத தகவல்கள் உள்ளது. இந்தியாவை தாண்டி எகிப்து, அரேபியா சீன போன்ற நாடுகளிலும் எள் நீண்டகாலமாக பயன்பாட்டில் உள்ளது. மக்னேசியம் அதிக அளவில் உள்ள எள் சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவர்கள் உணவிற்கு மற்ற எண்ணெய்களை விட எள் எண்ணெயைத்தான் அதிகமாக பயன்படுத்த வேண்டும். இந்த எள்ளில் உள்ள " சீஸ்மொல் " எனும் பொருள் இதய நோயை தடுக்க வல்லது. இந்த சீஸ்மொல் அணு கதிர்வீச்சில் உடல் செல்கலின் டிஎன் எ பாதிக்கப்படாமல் தடுக்கிறது. மேலும் இதை இருக்கும் "ப்யட்டே " எனும் பொருள் கேன்சர் வராமல் தடுகிறது. இந்த எள் எலும்பின் அடர்த்தியை அதிகப்படுத்தி எலும்புகளை வலுவாக்கி ஆர்திரிட்டிட்ஸ் போன்ற நோயை தடுக்கிறது.
வெள்ளை எள் இரும்பு சாது நிறைந்தது, கருப்பு எள் வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. எள் எண்ணையில் விளக்கு ஏற்றுவது எல்லாவித கிரஹ தோஷங்களையும் நிவர்த்தியாக்குகிறது. இந்த எள் காஸ்யப மஹரிஷியின் உடலில் இருந்து தவத்தின் போது வந்ததாக கூறப்படுகிறது. இந்த எள் இந்திய பாரம்பரியத்தில் நிறைய சடங்குகளுக்கும், யாகங்களுக்கும் பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மகர சங்கராந்தி நாளில் இந்த எள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது எள் கலந்த நீரை பருகி, எள் என்னை தேய்த்து எள் கலந்த நீரில் குளித்து எள் உணவுகளை தானம் செய்து எள் எண்ணையில் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது இந்த நாளில் வழக்கமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். மகர சங்கராந்தி நாளில் இது போன்று செய்வது பித்ருக்களின் தோஷத்தை தீர்க்கும் என்பது நம்பிக்கை.
இந்த எள் சிவனுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த எள்ளை சிவனுக்கு தொடர்ந்து அர்ப்பணம் செய்து வந்தால் நொடியில் இருந்து நிச்சயம் விடுபடலாம்