உயிர்தானத்திற்கு நிகரான அன்னதானம், செய்வதால் ஏற்படும் ஆச்சர்யங்கள்!

Update: 2022-10-20 00:45 GMT

அரிசி என்பது மங்களத்தை குறிப்பதாகும். அதனாலேயே பெரும்பஅலான புனிதமான காரியங்களுக்கு அரிசியை அட்சதையாக பயன்படுத்துவது வழக்கம். செல்வ வளத்தின் குறியீடாக அரிசி இருப்பதால் அதை மகாலட்சுமி அம்சம் என்று சொல்வதும் உண்டு. சமைக்கப்படாத பச்சை அரிசி என்பது செளபாக்கியத்தின் அடையாளம் அதனாலேயே திருமண சங்குகளில் மற்ற நல்ல காரியங்களில் வாழ்த்துவதற்காக அரிசியை தூவுகின்றனர்.

அரிசி என்பது நம் மரபில் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் அதே வேளையில் நம் ஆன்மீக செயல்பாடுகளில் தவிர்க்க முடியாத அம்சமாகவும் இருக்கிறது. அதனால் தான் பூஜை, வழிபாடு, சடங்குகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதையே நாம் இன்னொரு விதமாகவும் பார்க்க முடியும். இந்த அரிசியின் முக்கியத்துவத்தை நாம் உணரும் வகையில் அரிசியை அறுவடை செய்யும் நாட்களை நாம் பொங்கல், சங்க்ராந்தி என முக்கிய பண்டிகைகளாகவும் கொண்டாடுகிறோம்.

பிறந்த குழந்தைக்கு வழங்கும் முதல் உணவும் அரிசி தான். அவர்கள் கல்வி கற்கும் போது அட்சதையில் ஆ என்ற அகரம் எழுதியே பழகுகின்றனர். இவை அனைத்தும் உணர்த்துவது அரிசி என்பது வெறும் தானியம் மட்டுமல்ல நம் கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின், வழிபாட்டின் ஓர் அங்கம்.

அந்த அடிப்படையில் அன்னதானம் என்பது உயிர் தானத்திற்கு நிகரானதாக கருதப்படுகிறது. உணவு என்பது ஒருவரின் உயிர் சுமக்கும் உடலை வளர்ப்பது. அப்படிப்பட்ட அன்னத்தை நாம் தானம் செய்வதால் அதற்கு பிரானதானம் என்று பெயர். பெரியவர்களின் வார்த்தைகளின் படி அன்னதானம் செய்பவர்களுக்கு இனி பிறவி பிணி இல்லை.

பசித்தோருக்கு உணவு வழங்குவதை காட்டிலும் பெரிய பூஜைகளோ, வழிபாடுகளோ இல்லை என்கின்றன சாஸ்திரங்கள். நம் மரபிலேயே கோதானம், வித்யாதானம், என ஏராளமான தானங்கள் இருந்தாலும் அன்னதானம் மகாதானமாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சிலர், அன்னதானம் செய்கிற போது குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தான் என்கிற எல்லைகளை வகுத்து கொள்ள கூடும். அன்னதானம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும், இன்னும் சொல்லப்போனால் மனித இனத்தை தாண்டி பறவைகள், விலங்குகள் என அனைத்தின் பசியை போக்கும் தானமாக அது இருக்க வேண்டும்.

அன்னதானம் செய்தவர்களுக்கு மறு பிறவி இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

Tags:    

Similar News