செல்வ வளத்த ஈர்க்க உகந்தது நெய் தீபம் என்பது ஏன்?அதன் தார்பரியம் என்ன?

Update: 2022-02-09 01:30 GMT

நமது இல்லங்களில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பிரத்யேக அறை உண்டு. சமையலறை, படுக்கயறை, அந்த வரிசையில் நம் மரபில் பூஜை அறையை உருவாக்குவது வழக்கம். பூஜை அறையை பிரத்யேகமாக உருவாக்க இடம் இல்லையெனில் சுவற்றிலேனும் அதற்குரிய இடத்தை அமைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

பூஜையறையில் கலசம், சங்கு, செம்பு தட்டு, செம்பு பொருட்கள், ஆரத்தி, விளக்கு என ஏனைய பொருட்கள் வைப்பது வழக்கம். இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மகிமையும், முக்கியத்துவமும் நம் மரபில் உண்டு. அந்த வகையில் விளக்கு ஏற்றுவதற்கு என்று தனி முக்கியத்துவம் உண்டு. அதிலும் குறிப்பாக இறை வழிபாட்டிற்கு நெய் தீபம் உகந்ததாக கருதப்படுகிறது.

அக்னி புராணமும் நெய் விளக்கையே பரிந்துரைக்கிறது. காரணம், சாத்வீக ஆற்றலை ஈர்க்க கூடிய தன்மை நெய்யிற்கே அதிகம். அதுமட்டுமின்றி நேர்மறையான அதிர்வுகளை அதிக தொலைவுகளில் இருந்து ஈர்க்க வல்லது நெய் விளக்கு என்கின்றன ஆய்வுகள். எண்ணையில் ஏற்றப்படும் விளக்கும் நேர்மறை ஈர்க்கும் ஆற்றல் உடையது என்றாலும், அவை அறிவியல் ரீதியாக ஒரு மீட்டர் வரை அதன் தாக்கத்தை செலுத்தும் என்றும், நெய் விளக்கானது பல மீட்டர் வரை நீண்டு தன் தாக்கத்தை செலுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

எண்ணைய் விளக்கிற்கும் நெய் தீபத்திற்கும் நாம் கண்டுணரக்கூடிய மற்றொரு வித்தியாசம் உண்டு. அதாவது எண்ணைய் தீபம் ஏற்றப்படும் போது அதில் எரியும் சுடரானது மெல்லிதான மஞ்சள் நிறத்தில் எரியும். அதுவே நெய் தீபத்தில் ஒரு படி மேலாக சிறிய நீல நிற சுடரை மஞ்சள் நிறத்தோடு சேர்த்து நாம் காண முடியும். அந்த நீல நிறம் ஒரு மனிதனின் மனதில் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

அது மட்டுமின்றி அந்த நீல நிற சுடரானது அந்த சுற்றுபகுதி முழுவதிலும் ஆன்மீக தன்மை நிரம்பியிருப்பதை உறுதி செய்கிறது. ஆன்மீக பாதையில் யந்திரங்கள் வைத்து வழிபடுவது எத்தனை சக்தி வாய்ந்ததோ அதற்கு இணையான வல்லமை நெய் தீபத்திற்கு உண்டு. அதுமட்டுமின்றி நெய் தீபத்திற்கு குபேரரின் அருளை, ஆராவை ஈர்க்கும் தன்மை இருப்பதால், நெய் தீபத்தை தொடர்ச்சியாக ஏற்றும் வீடுகளில் செளந்தர்யம், செளபாக்கியம் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்

Tags:    

Similar News