அமிர்த கலசத்திற்கு இணையான மங்கள கலசம். நம் மரபில் கலசத்தை வழிபடுவது ஏன்?

Update: 2022-09-07 00:45 GMT

நமது மரபில் ஏதேனும் நல்ல காரியங்களை தொடங்கும் முன்பாகவோ அல்லது வழிபாடுகளின் போதோ கலசத்தை நிர்மாணிப்பது வழக்கம். இந்து மரபில் கலசம் என்பது மகிழ்ச்சி, செல்வம், அதிர்ஷ்டம், ஆசிர்வாதம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மங்கள கலசமானது பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்த கலசத்திற்கு இணையானது. எப்படி அமிர்த கலசத்தை உண்டவர்கள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்தர்களோ அது போலவே இந்த கலச வழிபாட்டை ஒருவர் செய்கிற போது அவர் கேட்கும் வரம் அவருக்கு நல்லபடியாக கிடைக்கும் என்பதன் அடையாளமாகவே கலசத்திற்கு நம் மரபில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

அதுமட்டுமின்றி நம் இல்லங்களில் நடைபெறும் நல்ல விஷேசங்கள் உதாரணமாக திருமணத்தின் போது கலசம் முன் செல்ல அதை பின் தொடர்ந்தே மணப்பெண்ணும், மணமகனும் செல்வதை நாம் காண முடியும். காரணம் கலசத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

கலசமில்லா விஷேசம் முழுமையடையாது என்பார்கள் பெரியவர்கள். கலசம் என்பது என்ன? ஏதேனும் உலோகத்தினால் குறிப்பாக தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகத்தினால் ஆன சிறிய செம்பு பாத்திரம். இந்த செம்பு பாத்திரம் நிறைய அரிசி அல்லது தண்ணீரால் நிறைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் புனித நதியின் நீரால் நிரப்புவார்கள். இந்த கலசத்தின் வாய் பகுதியை மாவிலையால் அலங்கரித்து அதன் மீது தேங்காயை வைப்பர்.

கலசத்தின் வெளிப்புறத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் கயிற்றால் அந்த கலசம் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டிருக்கும்.

இதில் கலசம் என்பது மனித உடல் எனவும், அதில் நிரப்பட்டிருக்கும் நீரானது மனித உடல் 80% நீரால் ஆனது என்பதை குறிக்கிறது. உலோகத்தால் செய்யப்பட்ட இந்த கலசம் தீய ஆற்றலை விலக்கி நல்ல ஆற்றலை ஏற்கிறது. இந்த கலசத்தின் கழுத்து பகுதி ருத்ர தேவனையும், அடிப்பகுதி பிரம்ம தேவரையும் இதன் மையப்பகுதி பூமி, கடல், மாற்றுகனங்கள், மற்றும் நான்கு வேதங்கள் ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது. கலசத்தில் கட்டப்படும் நூலானது குறுக்கும் நெடுக்குமாக அமைந்திருக்கும், அதாவது 72 வரிகள் இருக்குமாறு இருக்கும். மேலும் நீருக்கு இயல்பாகவே நினைவாற்றால் உண்டு. கலசத்தை வைத்து மந்திரங்கள் சொல்லப்படும் போது அந்த ஆற்றலை அந்த நீர் உள்வாங்கி கொள்கிறது. அதனாலேயே வழிபாடு முடிந்த பிறகு அந்த நீரை தீர்த்தமாக தருகின்றனர்.

மேலும் மாவிலைக்கு ஒரு அபார சக்தியுண்டு அது பெரும்பாலான கார்பண்டை ஆக்ஸைட்டை உள்ளிளுத்து ஆக்ஸிஜனை வெளியேற்றும் என்பதால். மற்றா தாவரங்களும் இதை செய்கின்றன என்ற போதும் மாவிலைக்கு இந்த தன்மை சற்று கூடுதலாக உண்டு. தேங்காய் என்பது இறைவனின் படைப்பை குறிப்பதாக உள்ளது.

Tags:    

Similar News