பீஜமந்திரங்களில் அர்த்தமிருப்பதில்லை ஆனால் அந்த ஒலி தரும் பலன்களோ ஏராளம்!

Update: 2022-06-16 01:39 GMT

ஒருவரின் வாழ்வில் செளகரியத்தையும், செளந்தரியத்தையும் ஈர்க்க வேண்டுமெனில் க்லீம் எனும் பீஜ மந்திரத்தை சொல்லலாம். ஒருவரின் வாழ்வில் தேவையான உதவிகளை இயற்கை இயல்பாக அமைத்து கொடுப்பதற்கு இந்த மந்திரம் உதவும். க்லீம் எனும் மந்திரம் நான்கு ஒலிகளால் ஆனது. க எனும் சப்தம், ல எனும் சப்தம், ஈ எனும் சப்தம், மற்றும் ம எனும் சப்தம் .

இந்த சப்தங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள் உண்டு. கா என்பதன் பொருள் "காரணம் " , ல என்பது பொருள் தன்மையிலான வடிவம், ஈ என்பது எதார்த்தம், மற்றும் இறுதி ஒலியான ம என்பது முழுமை. மேலும் க்லீம் என்பது மஹா காளி ஆகும்.

க்லீம் மந்திரம் என்பது 6 மந்திர வார்த்தைகள் கொண்ட மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை முறைப்படி சொல்வதனால் தீய ஆற்றல்களை நீக்கலாம். நமக்கு எதிராக இருக்கிற கோள்களின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம். தீய அதிர்வுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் அல்லது எதிரிகளின் பார்வையிலிருந்து விடுபட இந்த மந்திரம் உதவும். இந்த மந்திரம் துர்கை அம்மனின் அருள் நிறைந்தது.

மேலும் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்வதால் உறவுகளில் அமைதியும் ஆனந்தமும் பெருகும். க்லீம் மந்திரத்தை தொடர்ந்து பயிற்சி செய்பவர்களுக்கு அவர்கள் எதை வேண்டி மந்திர பாராயணம் செய்கிறார்களோ அதன் உட்சபட்ச நன்மையே கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. க்லீம் மந்திரத்தை 100 முறை ஒருவர் தினசரி சொல்வதால் உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீரும்.

ஒருவர் தினசரி 105 முறை இந்த மந்திரத்தை நினைத்து தியானித்தாலோ அல்லது பாராயணம் செய்தாலோ பொருளாதார சிக்கல்கள் நீங்கி வாழ்விற்கு தேவையான வளம் கிடைக்கும். கடவுளுக்கு சேவை செய்வதற்கான ஆசை, சிந்தனை, செயல் அனைத்தும் க்லீம் மந்திரத்தை பாராயணம் செய்வதால் கிடைக்கிறது.

நமக்கு பெரும் சவாலாக இருந்த விஷயங்கள் கூட இந்த மந்திரத்தை சொல்லி வந்ததால் இயற்கையாகவே நமக்கு சாதகமாக மாறும் சக்தி, மாற்றும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. இது போன்ற பீஜ மந்திரங்களுக்கு பொருள் இருப்பதில்லை ஆனால் அந்த ஒலியை நாம் உச்சரிப்பதால் சில நன்மைகள் நிகழும். எனவே இந்த தெய்வீக ஒலிகளை உச்சரிக்கும் போது மனம் தெளிவுடன் இருத்தல் அவசியம். அது பயிற்சியை தொடர்வதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

Tags:    

Similar News