முக்காலத்திலிருந்து விடுதலை அருளும் தத்தாத்ரேயர் வழிபாடு

Update: 2022-06-25 00:51 GMT

பிரம்மா, விஷ்ணு, சிவன் நம் இந்து மரபின் முப்பெரும் தெய்வங்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பெரும் தொழிலின் அதிபதியாக விளங்கும் இவர்கள். ஒரே ரூபம் கொண்டிருந்தால் அவரையே தத்தாத்ரேயர் என அழைக்கிறோம். இந்தியாவில் ஒரு சாரர் இவரை திருமாலின் மறு வடிவம் என வணங்குவது உண்டு. ஆனால் பெரும்பாலனவர்கள் இவரை மும்மூர்த்தியின் ஒரே மூர்த்தியாக கருதி வழிபடுகின்றனர்.

இவர் அத்ரி முனிவருக்கும் அவரது பத்னியான அனுசியாவிற்கும் பிறந்தவர் ஆவார். மும்மூர்த்திகளும் தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என அனுசியா தேவி என்னியதன் பயனாய் இவர் அத்ரி முனிவருக்கு மகனாக பிறந்தார். அத்ரியின் மகன் என்பதால் ஆத்ரேயர் என்றும் அத்ரி முனிவர் சூட்டிய நாமம் தத்தா என்பதாகும் இரண்டும் இணைந்து தத்தாரேயர் என பெயர் பெற்று விளங்குகிறார். இவர் நம் மரபின் ஆதியில் தோன்றிய தெய்வம் ஆவார். இவர் வருகைக்கான குறிப்புகள் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் உண்டு.

கருட புராணம், பிரம்ம புராணம், மற்றும் சத்வத சம்ஹிதா போன்ற புராணங்களில் இவர் மஹா விஷ்ணுவின் மறுவடிவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தத்தாத்ரேயரின் அவதார தலமாக சுசீந்திரம் கருதப்படுகிறது. அங்கிருக்கும் தாணுமலையான் கோவிலில் இவர் மும்மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இவருடைய உருவ அமைப்பு பகுதிக்கு பகுதி சிறிது மாறுபாட்டை கொண்டுள்ளது. ஆனால் பொதுவக இவருடைய திருவுருவ அமைப்பு என்பது மூன்று திருமுகங்களுடன் ஆறு கைகளுடனும் மும்மூர்த்திகளை குறிக்கும் படி அமைந்துள்ளது. அவருடைய கைகளில் பிரம்ம்மனின் ஜபமாலை, சிவனின் திரிசூலம் மற்றும் டமருகம் மற்றும் மற்ற இரு கரங்களில் விஷ்ணுவின் சங்கு சக்கரம் போன்றவை ஏந்தியிருக்கிறார்.

இவரை ஆதி குரு எனவும் அழைக்கின்றனர், ரிகோப்லோஸின் கூற்றின் படி சைவ சமயத்தின், நாத் பாரம்பரியத்தில் தத்தாத்ரேயர் ஆதிநாத் சம்பிர்தாயத்தின் ஆதி குருவாக கருதப்படுகிறார். ஒரு முறை தத்தாத்ரேயரின் ஆனந்த ரூபம் கண்டு அந்த ரகசியம் அறிய முனைந்த மன்னன் தங்கள் குரு யார் என்று வினவியதற்கு தனக்கு 24 குருக்கள் என ஆச்சர்ய பதிலளித்துள்ளார். அந்த 24 பேர் யாரெனில், பஞ்சபூதங்கள், சந்திரன், சூரியன், புறா மலைபாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் எடுப்பவன், மான், மீன் பிங்களை எனும் பெண், குரரம், ஆயுதம் தயாரிப்பவன், சிறுமி, பாம்பு சிலந்தி புழு சிறுவன் என 24 பெயர்களை சொல்லி அதன் தார்பர்யத்தையும் விளக்கியிருக்கிறார்.

எளிமையான சொரூபம் கொண்ட தத்தாத்ரேயருக்கு முடிவு என்பதே இல்லை. அனுமனை போலவே என்றும் சிரஞ்சீவி என்ற போற்றுதலுக்குரியவர். தத்தாத்ரேயரை வணங்கினால் மூன்று காலங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News