இலங்கையில் உள்ள முருகன் கோவில்- 'கதிர்காமம்'!

'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்' என்று முருகப்பெருமான் ஆலயங்கள் பற்றி சிறப்பித்து கூறுவார்கள். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் பற்றி காண்போம்.

Update: 2023-11-15 08:30 GMT

இலங்கையில் எண்ணற்ற ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கதிர்காமம் முருகப்பெருமான் திருக்கோவில். இந்த ஆலயம் தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இத்தல முருகனே சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என்றும் போற்றுகிறார்கள்.


கதிர்காம முருகனின் பெயர் தமிழ் மொழியில் 'பண்டாரநாயகன்' என்றும் வட மொழியில் கதிர்காமம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தீபொறியாக சரவண பொய்கையில் உள்ள பொற்றாமரை குளத்தில் அழகான முகத்துடன் முருகப்பெருமான் தோன்றியதால் இத்தளத்திற்கு 'கதிர்காமம்' என்ற பெயரும் இறைவனுக்கு கதிர்காமன் என்ற பெயரும் வந்தது.


கோவிலில் அருள் பாலிக்கும் முருகனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில் சிங்கள மன்னனான துட்டை கைமுனு கோவிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும் போரில் வென்ற பின்னர் இக்கோவிலில் நேர்த்திக் கடனை நிறைவேற்றியதாகவும் மகா வம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன.

Similar News