பக்தர்களின்றி நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா.!

இந்த முறை கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின்றி வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்துள்ளது.

Update: 2021-04-29 05:53 GMT

சீர்காழி அருகே உள்ளது பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில். அக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.

இந்த முறை கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின்றி வைத்தீஸ்வரன் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிக எளிமையாக நடைபெற்றது. அப்போது 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 8வது கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலைகளிலும் மகாதீபாராதனை நடைபெற்றது.




 


இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கோபுர விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரம் ஆதினம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

Similar News