மொரீஷியஸ் மக்களும் வழிபடும் சிவசுப்பிரமணியர் கோவில்

மொரீஷியசில் முருகப்பெருமானுக்கு தமிழர் ஒருவர் கோவில் அமைத்துள்ளார்.

Update: 2023-11-17 00:30 GMT

மொரீஷியஸல் உள்ள தமிழர்களுக்கு பழனி மிகவும் முக்கியமான வழிபாட்டு தலம். தமிழர்களின் புனித தலம் என்று கருதும் பழனிக்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட அனைவரின் கனவு. மொரீஷியஸில்  கார்ப்ஸ் டி கார்ட் மலையின்மீது அமைந்த சிவசுப்பிரமணியர் திருக்கோவில் பழனியை போலவே படைவீடு என்று போற்றப்படுகிறது .


இறைவா நான் தணிகை மலையை பார்த்ததில்லை. பழனி மலையையும் பார்த்ததில்லை. என் சோகத்திற்கு எல்லையே தெரியாது. அதனால் எனக்கு இந்த மலையில் அமைந்த ஆலயமே படைவீடு என்று இங்கு ஆலயம் அமைய காரணமாக இருந்த ஒருவர் பாடிய பாடல் பிரபலமாக இருக்கிறது. இதனை 'மொரீஷியஸ் முருகன் பாமாலை' என்கிறார்கள். 1884 ஆம் ஆண்டு மொரீஷியஸ் சென்ற தமிழக பயணிகள் சிலர் அங்குள்ள கடற்கரையில் இறங்கினர். அப்போதே அங்கு முருகன் ஆலயம் அமைக்க வேண்டும் என்று பக்தர் வேல்முருகன் என்பவருக்கு தோன்றியது.


அவரது எண்ணப்படி  கார்ப்ஸ் டி மலைச்சரிவுகளில் ஒரு முருகன் கோவிலை கட்டுவதற்காக 1897 ஆம் ஆண்டு ஒரு இடத்தை வாங்கினார். உடனடியாக அங்கே கோவில் நிறுவப்பட்டு முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டார். தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஆலயத்தில் இன்று மொரீஷியஸ் மக்கள் பலரும் வழிபாடு செய்கிறார்கள்.

Similar News