அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகப்பாம்பு.. கிருஷ்ணகிரியில் அதிசயம்.!
கோயிலில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு அம்மனை பயபக்தியுடன் வழிப்ட்டனர். மேலும், அதனை செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே அம்மன் சிலை மீது நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவுகுட்பட்ட வேலம்பட்டி, வேங்கானூர் செல்லும் வழியில் பொன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மாலை கோயிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென்று நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது. இதனால் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் அம்மனை வழிபட்டனர். மேலும் இது பற்றி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
கோயிலில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு அம்மனை பயபக்தியுடன் வழிப்ட்டனர். மேலும், அதனை செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.