அக்னி நட்சத்திரம் தொடங்கியதை ஒட்டி திருப்பதி வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்!

அக்னி நட்சத்திரம் ஆரம்பமானதை ஒட்டி கடும் வெயிலின் தாக்கத்தை குறைக்க பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.

Update: 2024-05-06 18:08 GMT

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியம் இப்பிறவியில் ஒருமுறையாவது கிடைத்து விடாதா என்று ஏங்குவோர் பலர் உண்டு. ஏழுமலையானை தரிசனம் செய்ய கோடான கோடி பக்தர்கள்  கால நேரம் பார்க்காமல் மழை வெயில் பார்க்காமல் இறைவனின் முக தரிசனம் கிடைத்தால் போதும் என்று பல மணி நேரம் காத்து தவம் கிடந்து தரிசனம் செய்கின்றனர். மணிக்கணக்கில் காத்திருக்கும் அந்த சோர்வு எல்லாம் மாதவனின் முகம் ஒரு நொடி காணும்போது மறைந்துவிடும். அந்த ஒரு நொடி பொழுதுக்காக ஏங்கும் பக்தர்கள் ஏராளம் ஏராளம் .

அக்னி நட்சத்திரம் துவங்கி இருப்பதை ஒட்டி திருப்பதிக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று கேட்ட கேள்விகளுக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி .தர்மா ரெட்டி பதில் அளித்தார். அப்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறியதாவது:-

அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ள நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உணவு, மோர்,  குடிநீர், காலை உணவு மருத்துவ வசதிகள் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படும் .கோவில் வீதிகளில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அனைத்திலும் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் பந்தல்கள் கூல் பெயிண்டுகள் கார்பெட்டுகள் அமைத்துள்ளோம். நாங்கள் அவ்வப்போது தண்ணீரை தரையில் தெளிக்கிறோம். நாராயணகிரி தோட்டங்கள் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க தற்காலிக கொட்டகைகள் அமைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News