உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்க ஜோதிடம் காட்டும் ஆச்சர்ய வழிமுறைகள்.

Update: 2022-07-01 01:04 GMT

சிலர் உழைப்பில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், சிலரோ அசாதாரணமான திறமைசாலிகளாக இருப்பார்கள் ஆனாலும் தொழி வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலர் கடின உழைப்பாளியாக இருப்பார்கள், ஆனால் சாமர்த்தியசாலிகளாக, வாய்ப்பை வசப்படுத்துவபவர்களாக இருக்க மாட்டார்கள். இது போல ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், பெரும்பான்மையாக சொல்லப்படும் காரணம், நேரம் சரியில்லை. அல்லது ஜாதகத்தில் பிரச்சனை.

ஒருவரின் வெற்றிக்கு முழுமையான காரணம், முயற்சியும் பயிற்சியும் தான். என்றாலும் கூட நம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவைகளை முயற்சிப்பதில் தவறில்லை. அந்த வகையில் தொழில் வாழ்க்கையில் ஏற்றம் பெற பரிதுரைக்கப்பட்ட பரிகாரங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

சனிக்கிழமைகளில் வேகவைத்த சோற்றை காகத்திற்கு வழங்குங்கள். காகம் என்பது சனிபகவானின் அடையாளமாகும். ஒருவரின் ஜாதகத்தில் தொழில்வாழ்கையின் அதிபதியாக இருப்பவரும் அவரே, எனவே காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனிபகவானின் அருளுக்கு பாத்திரமாக முடியும்.

தொழில் வாழ்வில் ஏற்றம் பெற சூரிய பகவானின் அனுகூலத்தை பெறுவது நன்மை தரும். அவரின் அருளை பெற செம்பு பாத்திரத்தில் நீரெடுத்து அதில் சிறிது வெல்லம் கலந்து அதிகாலை சூரிய உதயத்தின் போது சூரியனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். குறிப்பாக, ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ எனும் மந்திரத்தை சொல்லியவாறே அர்ப்பணிப்பது நல்ல பலனை தரும். இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும்.

அதை போலவே ஒவ்வொரு நாளும் 31 முறை காயத்ரி மந்திரம் மற்றும் மிருத்யுஞ்சய் மந்திரம் சொல்வது மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்.

அடுத்து, தடைகளை அகற்றும் கடவுளான கணேசர் வழிபாடு, ஒருவரின் வெற்றிகரமான தொழில்வாழ்க்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அவருடைய பீஜ மந்திர உச்சாடனம் நல்ல பலன்களை கொடுக்கும்.

தொழிலில் முன்னேற்றம் தான் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வின் அடிப்படை அம்சமாக விளங்குகிறது. அந்த அடிப்படை அம்சம் நல்லபடியாக அமைந்துவிட்டால் ஒருவரின் வாழ்விலிருக்கும் மற்ற சிக்கல்கள் மெல்ல மெல்ல விலகும். ஆனால் வாழ்கை அத்தனை எளிமையானதாக அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் செய்த பிறகு நம்முடைய சூழல் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

Tags:    

Similar News