ஜோதிட அறிவியலின் படி சுக்ரனும் புதனுமே திருமணத்திற்கு காரணமானவர்கள். ஜோதிட கட்டத்தில் 7 மற்றும் 12 ஆம் இடம் திருமணத்தை குறிக்கிறது. மேல் குறிப்பிட்ட ஈரு கிரஹங்களின் பாவ புண்ய தன்மை மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் பார்வைகள் போன்றவைகளால் திருமணம் தள்ளி போகிறது. ஒவ்வொரு வயதிற்கும் தக்கதாக திருமண தடை குறித்த பரிகாரங்களை சாஸ்திரங்கள் குறிப்பிட்டிருக்கின்றன
18-24 வயதினர்
இந்த வயதில் இருப்பவர்கள் திருமணத்தடை யை எதிர்கொண்டால் அவர்கள் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் ஆடை அணிந்து ஓம் கௌரிஷங்கராய நமஹ என்கிற மந்திரத்தை சிவன் பார்வதியை வழிபட்டு சொல்லி வர வேண்டும்
25-30 வயதினர்
இந்த வயதில் இருப்பவர்கள் வியாழக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் ஆடை அணிந்து வர வேண்டும் மேலும் சிவலிங்கத்திற்கு திங்கட்கிழமை பாலும் தண்ணீரும் அபிஷேகம் செய்து வர வேண்டும் இவர்கள் "பார்வதிப்பதையே நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை 9 வியாழக்கிழமை சொல்லி வர வேண்டும்
31-35 வயதிற்குள்
இந்த வயதில் இருப்பவர்கள் வீட்டின் முன் வாழை மரத்தை நட்டு வளர்க்க வேண்டும், வியாழக்கிழமைகளில் உப்பை தவிர்ப்பது நல்லது மேலும் விஷ்ணுவின் சிலை முன்பு ஓம் ப்ரும் ப்ரஹஸ்பதயே நமஹ என்கிற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
36-40 வயதிற்குள்
இந்த வயதில் இருப்பவர்கள் 108 வில்வ இலையில் ராமனின் பெயரை சந்தனத்தில் எழுதி சிவலிங்கத்திற்கு வைத்து ஓம் நமசிவாய என்று சொல்லி வணங்கி வர வேண்டும்
இதை தவிர திருமண தடைக்கு மிக பிரபலமான மற்றும் முக்கியமான கரணம் செவ்வாய் தோஷம் எனும் தோஷமாகும், இந்த தோஷாத்தை பற்றி பலரும் தவறாக புரிந்து வைத்திருப்பதால், இதற்கான பரிகாரங்களும் பலனளிக்காமலேயே போகின்றன, செவ்வாய் கிரகம் ஒரு குறிப்பிட்ட வீட்டில் குறிப்பிட்ட பார்வை பெற்றிருந்தால் அது திருமணத்தை பாதிக்கும் எனவே இது ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே செவ்வாய் தோஷத்திற்கு சொல்லப்படும் பொது பரிகாரங்களை மட்டுமே பின் தொடராமல், ஒவ்வொரு ஜாதகத்தையும் ஆய்வுப்படுத்தி பரிகாரங்கள் மேற்கொள்வது சிறப்பாக அமையும்.