நம் மரபில் கைகளில் கயிறு அணிவது புனிதமாக கருதப்படுவது ஏன்?ஆச்சர்ய காரணம்

Update: 2022-02-19 01:15 GMT

நமது இந்து மரபில் கைகளில் ரக்‌ஷை எனப்படும் கயிறு கட்டுவது மிகவும் புனிதமான ஒரு விஷயமாக கருதப்படுகிறது. திருநீறு பூசிக்கொள்வதும், குங்குமம், திருமஞ்சனம் போன்றவற்றை அணிந்து கொள்வதை போலவே கயிறு கட்டுதல் என்பது புனிதமான ஒரு செயலாகும். ஆனால் கயிறு கட்டுவதில் பல வகை உண்டு.

உதாரணமாக திருமணத்திற்கு முன்பாக கையில் கயிறு வடிவிலான கங்கனம் அணிவார்கள். சில சமயங்களில் திருவிழாக்களில் முக்கிய சடங்கில் பங்கேற்போறும் இது போன்ற கங்கனம் அணிவார்கள். இதன் பொருள் எடுத்த காரியத்தை முடிக்காமல் அந்த கங்கனத்தை அவிழ்க்க மாட்டேன் என்பதாகும்.

அதுமட்டுமின்றி கைகளில் தெய்வங்களின் தன்மைகளுக்கு ஏற்ப பல வித நிறங்களில் கயிறு அணியும் பழக்கம் நம்மிடையே உண்டு. மங்களகரமான காரியங்கள், பூஜைகள் எனில் மஞ்சள் நிற கயிறும், மந்திரித்து தாயத்து போன்ராவற்றை கட்டுகிற போது கறுப்பு நிற கயிறும். தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து கோவில்களில் இருந்து தெய்வத்தின் ஆசியாக, பிரசாதமாக பெற்று அணிவது சிவப்பு நிறத்தில் இருப்பது வழக்கம்.

வழிபாட்டுக்குரிய தெய்வத்தின் தன்மைக்கேற்ப நிறம் வேறுபடும். அடிப்படையில் கயிறு அணிவதன் பொருள் இறைவனின் ஆசியை நம்மோடு எப்போது தொடர்பில் வைத்திருப்பது என்பது ஆகும். பிரதிஷ்டை செய்யப்பட்ட கயிறுகளை நாம் கைகளில் அணிகிற போது இறைவனின் அருள் எப்போதும் நம்மோடு துணையிருக்கிறது என்பது நம்பிக்கை. இருப்பினும் ஏன் கைகளில் கயிறு அணியும் பழக்கம் நம்மிடையே வந்தது என்கிற கேள்வி இன்றைய நவீன தலைமுறையிடம் உண்டு.

நம் முன்னோர்கள் எதையும் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தே உருவாக்கினார்கள். இந்த கயிறுக்கென தேர்ந்தடுக்கப்பட்ட நிறங்கள் ஆற்றல்களை உள்ளிழுக்கும் தன்மை கொண்டவை ஆகும். அதுமட்டுமின்றி கைகளின் மணிகட்டில் நரம்புகளின் தொகுப்பு அமைகிறது அந்த இடத்தில் ஓர் அழுத்தம் பதிகிற போது உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், கபம், பித்தம் ஆகியவை நீங்குகிறது. இது உடலின் மற்ற இயக்கத்திற்கு நல்லதொரு ஊக்கியாக இருப்பதால் இந்த இடத்தில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும் பொருட்டு இப்படியொரு பழக்கம் நம்மிடையே காலம் காலமாக இருந்து வந்திருக்கலாம்.

எனவே இந்த ரக்‌ஷை, அல்லது சூத்திரா உளவியல் ரீதியாக நமக்குள் இருக்கும் அச்சத்தை போக்குகிறது. ஆன்மீக ரீதியாக நமக்குள் இருக்கும் ஆன்ம பலத்தை கூட்டுகிறது.

Tags:    

Similar News