இந்து மரபில் ஏராளமான சடங்குகள் ஆழமான அர்த்தத்துடன் ஆன்மீக அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒரு சடங்கு அஸ்வமேத யாகம் இந்த யாகம் அரச குடும்பத்தில் செய்யப்படுவதால் இது ராஜ யாகம் என்றே அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த அஸ்வமேத யாகம் குறித்து ஏராளமான இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு. தாத்திரிய சம்ஹிததில் 7ஆவது காண்டத்தில் அஸ்வமேத யாகம் குறித்து விரிவாக பேசப்படுகிறது. மேலும் இராமாயணம், மஹாபாரதத்தில் இந்த யாகத்தின் முக்கியத்துவம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அஸ்வமேத யாகம் பல காரணங்களுக்காக செய்யப்படுகின்றன. அதில் முக்கியமானவை இரண்டு: ஒன்று அரசர்கள் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ யாரையாவது கொன்ற சாபத்தை பெற்றிருந்தால் அந்த சாப நிவர்த்திக்காக இந்த யாகம் செய்யப்படுகிறது. உதாரணமாக ராவணன் அந்தணர் அவரை கொன்றதற்காகவும், மற்றொரு பெண்ணை வதம் செய்ததற்காகவும் இந்த யாகம் செய்யப்பட்டது.
மேலும் தன்னுடைய நிலப்பரப்பை விரிவுப்படுத்த நினைத்த பெரும் சக்ரவர்த்திகள் இது போன்ற அஸ்வமேத யாகத்தை செய்ததாகவும் குறிப்புகள் உண்டு. அஸ்வமேதம் என்பதன் அர்த்தம் நிர்வகித்தல் மற்றும் திறம் பட மேலாண்மை என்பதாகும். எனவே அஸ்வமேத யாகம் செய்யப்படுவது நல்ல நிர்வாகத்தின் அறிகுறியாகும்.
மஹாபாரதம் சாந்திபர்வதத்தில் அஸ்வ தானம் குறித்த விரிவான விளக்கங்கள் உண்டு. அதில் எவ்வாறு அரசர் வசு அவர்களால் இந்த யாகம் கவனத்துடன் திட்டம் தீட்டப்பட்டது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்டது என்ற தகவல்கள் உண்டு. மேலும் அஸ்வத மேத யாகத்தின் போது அரச குறியீட்டை சுமந்து செல்லும் குதிரை எந்தவித தடையுமின்றி கால் போன திசையில் பயணிக்கும். அது செல்லும் திசையெங்கும் அந்த அஸ்வத்தை ஏவிய சக்ரவர்த்திக்கே சொந்தமாகும். அதில் உடன்பாடு இல்லாத அரசர்கள் அந்த குதிரையை பிடித்து வைக்கலாம். அவ்வாறு அவர்கள் அந்த குதிரையை சிறைபிடித்தால் அவர்கள் போருக்கு தயாராக இருக்கின்றனர் என்று பொருள்.
குதிரைகள் என்பது மனித மனதின் குறியீடு. மனித மனம் எவ்வாறு கட்டுபாடு இன்றி கட்டற்று திரிகிறதோ, அது போலவே குதிரையும். அந்த குதிரையை சிறைப்பிடித்து அடுத்த கட்டத்திற்கு நகர்தலை போலவே, ஒருவரின் மனம் லெளகீகத்திலிருந்து அடுத்த படிநிலையான ஆன்மீக நிலையை அடைகிறது என்று பொருள்.
Image: Pinterest