ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பலவற்றுள் முக்கியமானது மஞ்சள் !

Update: 2021-10-18 00:30 GMT

ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் பலவற்றுள் முக்கியமானது மஞ்சள். மங்களத்தின் அடையாளம். சுப காரியங்கள் அனைத்தும் இது இன்றி நடப்பதில்லை. மஞ்சள் கரைத்த நீர், மஞ்சளில் விநாயகர் பிடித்தல், வீட்டின் வாசலுக்கு மஞ்சள் நீர் தெளித்தல் என ஒவ்வொரு சடங்கிலும் பாரம்பரியத்திலும் மஞ்சள் ஓர் அங்கமாக இருக்கிறது.

தெய்வீக அம்சம் பொருந்திய மஞ்சள் அம்மனின் மறு ரூபமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொன்னால் ஆடி பூஜை மற்றும் சில பூஜைகளின் போது மஞ்சளால் அம்மனின் திருமுகத்தை அமைப்பது நம் மரபு. இத்தனை முக்கியத்துவம் மஞ்சளுக்கு அளிக்கப்படுவதற்கு அதன் ஆரோக்கிய குண நலன்களும் ஒரு காரணம். இதனை ஆரோக்கியமான உணவு வகைகளிலும் வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதிலிருக்கும் அலாதியான மருத்துவ குணங்களின் காரணமாக, இதனை இந்திய உணவு கட்டுப்பாட்டில் இணைத்திருக்கிறார்கள். மேலும் பல மருந்துகளை உருவாக்குவதில் முக்கிய மூலிகையாகவும் இது கருதப்படுகிறது. இதற்கு இருக்கும் மருத்துவ குணத்தின் மூலம் கேன்சரை குணமாக்கும் அதிசய தன்மை இதில் இருப்பதாக சொல்கின்றனர். கேன்சரை தடுக்க கூடிய சத்துக்கள் இதில் உள்ளன.

மேலும் உடலில் இருக்கும் செல்களை காக்க கூடிய பாதுகாப்பு ஆண்டி ஆக்ஸ்டன்டாக மஞ்சள் செயல்படுகிறது. மேலும் மஞ்சளுக்கு இன்சுலீனை தூண்டும் தன்மை இருக்கிறது என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. இதனை தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்ட அளவில் உட்கொள்வதால் நீரிழிவு நோயின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்கு இயல்பாகவே குளுக்கோஸின் தன்மையை சமநிலையுடன் வைத்திருக்கும் பக்குவத்தை இந்த மஞ்சள் வழங்குகிறது. டைப் – 2 வகையிலான நீரிழிவு நோய்க்கு இது ஏற்றதாக இருக்கும்.

மஞ்சளின் மற்றொரு முக்கிய அம்சம் லிப்போபோலி சாக்ரைட், இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் காயங்கள் ஏற்படுகிற போது எந்தவித தொற்றும் ஏற்பாடாது இருக்க களிம்புக்கு பதிலாக இந்த மஞ்சளை பயன்படுத்துவது நம் பண்டைய பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு இந்த மஞ்சள் வெகுவாக உதவுகிறது. தோள் ரீதியான பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் தேய்த்து குளிக்க வைப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

 Image : TOI

Tags:    

Similar News