சில காலமாக மேலை நாட்டில் வாழும் மக்கள் இந்திய கலாச்சாரத்தின் ஆதிக ஈடுபாடு கொண்டு வருகின்றனர், குறிப்பாக இந்தியர்களின் பாரம்பரியம், உணவு முறைகள், உடைகள் போன்றவைகளை அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இந்தியர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து அலங்காரப்படுத்தி கொள்ளவும்,சடங்கு சம்பிர்தாயங்களின் குறியீடுகளான ருத்ராட்சம், பொட்டு, போன்றவைகளை அணிந்து கொள்வதை நம்மால் கவனிக்க முடிக்கிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் இந்து மதத்தின் அருகில் இருப்பதை போல் உணர்கிறார்கள்.
குறிப்பாக பொட்டு என்கிற அழகியல் அம்சத்தை அவர்கள் பெரும்பாலும் அணிந்து கொள்ள விரும்புகிறார்கள். பொட்டு என்கிற அம்சத்தை புருவ மையத்தில் வைப்பதையே சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. ஆண்கள் நெற்றியில் திலகமிடும் போதும், பெண்கள் அதை பொட்டாக சூடும் போதும் புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம் தூண்டப்பட்டு அவர்களை சுற்றி பல நல்ல அதிர்வுகள் ஏற்படுகின்றன.
காரணம் ஆக்ஞா சக்ரத்தில் தான் இடகலை, பிங்கலை, மற்றும் சுசும என்கிற மூன்று முக்கிய புள்ளிகள் சங்கமிக்கின்றன. யோக அறிவியலின் படி மற்ற ஐம்புலன்களும் பிரபஞ்ச ஆற்றலோடு இசைந்திருக்கும் போது இந்த புள்ளியே மனதின் ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே இந்த சக்கரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்காமல் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்திருப்பதென்பது சாத்தியமில்லை. அப்படி இணைந்திருந்தால் மட்டுமே உங்களுக்குள் இருக்கும் உள்ளாற்றலை உங்களால் உணர முடியும்.
உங்கள் உள்ளாற்றலை உணர்கின்ற போது அதில் எழும் உள்ளார்ந்த சக்தியின் மூலம் உங்கள் மூளையுடன், உங்கள் மனதுடன் தொடர்பு கொண்டிருக்க முடியும். அப்படியிருக்கிற போது இனி நடக்கவிருக்கும் செயல்கள் தெளிவுற உங்களுக்கு பிடிப்படும்.