மூன்றடி மண் கேட்ட வாமனர். மாவலியின் பெருமை போற்றும் ஓணம் உருவான கதை

Update: 2022-09-08 00:30 GMT

தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக கொண்டாப்படுகிறது ஓணம். இது கேரள மாநிலத்தின் மிக முக்கியமான பண்டிகையாகும். அதுமட்டுமின்றி இந்த பண்டிகை அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பண்டிகை நாளாக கொண்டாடப்படுகிறது.

மலையாள வருடத்தின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் கொண்டாடப்படுகிறது. சங்க கால குறிப்புகளின் படி ஓணம் என்பது விஷ்ணு பெருமாளின் பிறந்த நாள் என்றும் வாமன அவதாரத்தில் அவர் அவதரித்த நாளின்று என்றும் கருதப்படுகிறது.

ஓணம் பண்டிகை குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், கேரள தேசத்தை ஆண்டு அந்த மாவலி என்கிற மன்னன் தீவிர விஷ்ணு பக்தர். அனைவருக்கும் அள்ளி வழங்கும் வள்ளல். கேட்போருக்கு கேட்பதை கொடுப்பதாலேயே அவருக்குள் கர்வம் எழுந்தது. அந்த கர்வத்தை களைவதற்காக விஷ்ணு வாமன வடிவமெடுத்து பூலோகம் வந்தார்.

சிறு குழந்தை வடிவில் வாமன அவதாரமெடுத்து அவர் வந்தபோது, அவர் கேட்பதை கொடுத்துவிட முடியும் என்கிற கர்வத்தில் எதை வேண்டுமானாலும் கேளுங்கள் என மாவலி சொல்லவும். எனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்றார் வாமனர். மூன்றடி தானே உங்கள் கால்களால் அளந்து காட்டும் இடத்தை நான் உங்களுக்கு தருகிறேன் என்று மீண்டும் செருக்குடன் சொன்னான் மாவலி.

வந்திருப்பது விஷ்ணு பெருமான் என்பதை மாவலி அறியவில்லை. வாமனராக வந்த விஷ்ணுவோ தன்னுடைய முதல் அடியில் விண்ணுலகையும், இரண்டாம் அடியில் மண்ணுலகையும் என மொத்த பிரபஞ்சத்தையும் அளந்தார் வாமனர். மூன்றாம் அடியை எங்கே வைக்க என அவர் கேட்ட போது, வந்திருப்பவர் விஷ்ணுவென அறிந்து தன் தலையின் மீது வைக்குமாறு கூறினார் மாவலி.

அதன் படி அவர் தலையில் வைத்து கர்வம் போக்கி, உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என வாமனர் கேட்ட போது ஒவ்வொரு ஆண்டும் நான் என் மக்களை காண வரவேண்டும் என வேண்டினார். அவ்வாறே அவர் வரும் நாளை ஓணம் என மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க இந்த பெருவிழாவை கேரளத்து மக்கள் உலகெங்கிலும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் ஓணம் சதயா எனும் விருந்துண்பதும், பூக்கோலமிட்டு வழிபாடுகள் செய்து கொண்டாடுவதும் வழக்கம்.

Tags:    

Similar News