பிரமிக்க வைக்கும் ஆச்சர்யம்! இளநீரில் தீபம் எறியும் தமிழகத்தின் அதிசய ஸ்தலம்!

பிரமிக்க வைக்கும் ஆச்சர்யம்! இளநீரில் தீபம் எறியும் தமிழகத்தின் அதிசய ஸ்தலம்!

Update: 2021-02-03 06:00 GMT

இந்து மரபில் கோவில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. குறிப்பாக தமிழகத்தில் இருக்க கூடிய கோவில்கள் சக்தி மிக்கதாகவும், அதிசயம் வாய்ந்ததாகவும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

எந்தவொரு கோவிலை எடுத்து கொண்டாலும், அதிலிருக்கும், சிறு சிற்பம், ஓவியம், குளம், மரம் என எதோவொரு தெய்வீக அம்சம் அந்த கோவிலின் புகழை பறைசாற்றுவதாக இருக்கும்.

சில கோவில்களை தூண்களை தட்டினால் இசை கேட்பதும், மீன்களே வளராது எனும் குளமும், மூலவர் மீது மட்டும் குறிப்பிட்ட நாளில் சூரிய ஒளி படுவது போன்ற என்னற்ற ஆச்சர்யங்களை காண்பவர்கள் நாம்.

இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றையே, இறைவன் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அவனை உணர்வே அவன் பல ரூபங்கள் கொண்டு நம் முன் உலவுகிறான். அதுமட்டுமின்றி இந்து மரபில் மட்டுமெ சித்தர் வழிபாடு என்பதும் புகழ்பெற்றதாக இருக்கிறது. ஆன்மீக பாதையில் ஆழங்கால் பட்ட சித்தர்கள் அருளும் இறைவனின் ஆசிக்கு இணையாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல சித்தர்கள் அதிசயம் வாய்ந்த பல கோவில்களை உருவாக்கியுள்ளனர்.

அந்த வகையில் மிகுந்த அதிசயமிக்க தலமாக கருதப்படுவது 101 சாமி மலை என்ற பெயர் கொண்ட ஸ்தலம். இந்த ஸ்தலம் ஓசூரிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிகம் என்ற பகுதிக்கு அடுத்துள்ள பகுதி கோட்டையூர். அந்த கோட்டையூர் பஞ்சாயத்தின் ஒரு அங்கமாக இந்த கோவில் உள்ளது.

இங்கு மூலவராக சிவன் இருக்கிறார். இந்த கோவிலில் நிகழும் அதிசயம் யாதெனில், இங்குள்ள சிவனுக்கு அன்றாடம் இளநீரில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த அதிசயத்தை சமூக வலைதள காணொளிகள் பலவற்றிலும் நம்மால் காண முடிகிறது. அங்கே விற்கப்படும் இளநீரை வாங்கி பக்தர்களும் அந்த விளக்கை ஏற்றும் அதிசயம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

குகை போன்ற அமைப்பு இந்த சிறு கோவிலில், ஓரடி உயரத்தில் ஒரு கல்லால் ஆன விளக்கு ஒன்று உண்டு. இந்த விளக்கில் தான் இளநீரை ஊற்றி தீபம் ஏற்றுகின்றனர். இவ்வாறு தீபம் ஏற்றுவதால் நினைப்பது நடப்பதாகவும், பக்தர்களுக்கு மன அமைதியும் வேண்டிய வரமும் கிடைப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News