பல ஆண்டுகள் நீரில் மூழ்கியிருந்த ஆச்சர்ய வேணுகோபால் சுவாமி திருக்கோவில்

Update: 2022-06-17 00:27 GMT

கர்நாடகா மாநிலத்தில் ஹொச கண்ணம்பாடி எனும் இடத்தில் கிருஷ்ண ராஜ சாகருக்கு அருகில் அமைந்துள்ளது வேணுகோபால் சுவாமி ஆலயம். இந்த கோவில் மைசூர் மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரத்தில் இருக்கும் சென்னகேசவா ஆலயம் கட்டப்பட்ட அதே நேரத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அதாவது கிபி 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

1909 ஆம் ஆண்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா அவர்கள் கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்ட முடிவு செய்வததற்கு முன்பிருந்தே இந்த கோவில் கோவில் வளாகம் இங்கே அமைந்திருந்தது. இந்த கே.ஆர்.எஸ் அணை திட்டத்தை கண்ணம்பாடி என்று அழைப்பது வழக்கம். அப்போது மைசூரின் அரசராக இருந்த நான்காம் .கிருஷ்ண ராஜ உடையார் அவர்கள் இந்த கண்ணம்பாடியில் வசிக்கும் மக்களுக்காக புதிய கிராமத்தை கட்டமைக்க சொன்னார். அதுவே பின்னாளில் ஹொச கண்ணம்பாடி அதாவது புது கண்ணம்பாடி என அழைக்கப்பட்டது.

வேணுகோபால் சுவாமி வளாகத்தின் அருகே இருந்த மற்ற இரு கோவில்களான கென்னேஸ்வரா மற்றும் காலம்மா ஆலயம் கைவிட்டப்பட்டது. 1930 இல் அணை கட்டுமானத்தின் முதல் பகுதி நிறைவுற்ற போது மூன்று கோவில்களும் நீரில் மூழ்கின. அப்போது முக்கிய மூலவரான வேணுகோபால் சுவாமி அதாவது கிருஷ்ண பரமாத்மா கையில் குழலை வாசித்தவாறு பசுக்களின் புடை சூழ இருக்கும் திருவிக்ரகம் கிராமத்தின் புதிய கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

முன்பிருந்த ஆலயம் 50 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்ட வளாகமாக காட்சியளித்தது. இந்த வளாகம் இரண்டு முக்கிய பிராகரங்களை உள்ளடக்கியது. வெளியே இருக்கும் மஹாதுவாரத்தை கடக்கையில் இரண்டு புறமும் யாக சாலைகளும் சமையல் கூடமும் உண்டு. மற்றும் இரண்டாம் மஹாத்வாரத்தை கடக்கையில் சோமநாதபுரம் கோவிலுக்கு அருகே நாம் செல்ல கூடும்.

1909 இல் கண்ணம்பாடி அணை கட்டப்பட திட்டமிட்ட பிறகு இக்கோவில் நீரில் மூழ்கியிருக்கிறது. கிட்ட தட்ட 70 ஆண்டுகள் வரை இந்த கோவில் நீரில் தான் மூழ்கியிருந்தது. வெள்ளம் வடிகிற போதும், வறட்சியான காலகட்டத்திலும் இக்கோவில் வெளிப்பட்ட வண்ணமே இருந்துள்ளது. சமீப காலத்தில் தான் ஹொச கண்ணம்பாடியில் புது கோவில் கட்டப்பட்டு திருவிக்ரகம் இங்கே வைத்து வழிபடப்படுகிறது.

Tags:    

Similar News