சூரியவொளி குருவாயூரப்பனின் காலில் படும் அதிசயம்.. குருவாயூரின் ஆச்சர்யங்கள்!

சூரியவொளி குருவாயூரப்பனின் காலில் படும் அதிசயம்.. குருவாயூரின் ஆச்சர்யங்கள்!

Update: 2020-11-21 05:30 GMT

தென்னகத்திலுள்ள கோவில்களில் மிக முக்கியமான கோவில்களாக சொல்லப்படும் வரிசையில் குருவாயூர் கோவிலுக்கு மிக முக்கிய இடமுண்டு. விஷ்ணுவின் வித்யாசமான கோலத்தை இங்கே தரிசிக்க முடியும். இக்கோவிலில் மூலவராக இருக்கும் குருவாயூரப்பனின் திருவுருவம் இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்பே உருவாக்கப்பட்டதாம் .

விஷ்ணு பரமாத்மா இந்த உருவத்தை, பிரம்மா உலகத்தை படைக்கும் முன்னரே படைத்தாராம். இந்த ரூபத்தை பக்தியில் உரைந்திருந்த அரசன் சுதாபஸ் மற்றும் அவர் மனைவி ப்ரசனிக்கு பிரம்மா வழங்கினார் என சில புராண குறிப்புகள் சொல்கின்றன. அவர்களின் பக்தியை மெச்சிய விஷ்ணு பரமாத்மா தன்னுடைய அவதாரங்களில் நான்கு அவதாரம் இந்த அரச குடும்பத்தை சார்ந்தே நிகழும் என்கிற வரத்தை அளித்தாராம்.

அதன் படியே தன்னுடைய அவதாரங்களில் பரசன்னிகர்பா, வாமனா, ஶ்ரீ ராமா, கிருஷ்ண என்ற நான்கு அவதாரத்திலும் அவர்களுக்கு பிள்ளையாகவே பிறந்தார். கிருஷ்ணா அவதாரத்தில் கிருஷ்ணனின் தாயாகவும் தந்தையாகவும் இவர்களே வாசுதேவன் மற்றும் தேவகியாக அவதரித்தனர்.

அவர்களிடம் இருந்த இந்த குருவாயூரப்பன் சிலையை கிருஷ்ணன் பெற்று துவாரகையில் வைத்திருந்ததாகவும் உலக வாழ்விலிருந்து வெளியேறும் முன், ஶ்ரீ கிருஷ்ணன் தன்னுடைய நண்பனான உத்தவாவை அழைத்து ஒருநாள் துவாரகை கடலில் மூழ்கும் அப்போது இந்த விஷ்ணு சிலையை பத்திரமான இடத்திற்கு  எடுத்து செல்லுமாறு பணித்திருந்தாராம். அதன் படி துவாரகை அதன் அழிவை சந்தித்த போது வாயு புத்திரன் மற்றும் குருமார்களின் உதவியுடன் இன்று குருவாயூர் அமைந்திருக்கும் எடுத்து வரப்பட்டார் என சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் சிவனே விஷ்ணுவை வழிபட்டார் என்பது வரலாறு. குருவின் துணையுடனும், வாயுவின் துணையுடனும் இத்திருத்தலம் அமைந்ததால் இவ்விடம் குருவாயூர் என அழைக்கப்படுகிறது. கி.பி 1638 ஆம் ஆண்டிலேயே இந்த கோவிலின் மைய கர்பகிரஹம் கட்டப்பட்டது. திப்பு சுல்தான் போன்ற பல மன்னர்களால் இந்த கோவில் பல முறை பாதிப்புகளை சந்தித்தது. அதன் பின் பல முறை பலவிதமான புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

இன்று நாம் காணும் கோவில் கேரளா கட்டிடக்கலையின் படி கட்டப்பட்டது. மூலவரை இன்று நாம் நுழைவு வாயிலிலிருந்தே காண முடியும். விஷு என்று சொல்லக்கூடிய கேரள வருட பிறப்பு நாளில் சூரிய ஒளி குருவாயூரப்பனின் திருவடிகளில் விழும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. நான்கு கரங்களில் சங்கு, சக்கர, கதம் மற்றும் தாமரையை ஏந்தி அழுகுற அவனளிக்கும் காட்சியை காண பல இலட்சம் மக்கள் இங்கே குவிகின்றனர். இக்கோவிலை பூலோக வைகுண்டம் எனவும் சொல்வதுண்டு.

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ

Similar News