இந்து மதம் சார்ந்த வழிபாட்டு தளங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. ஆனால் உட்சபட்ச படைப்பாளாரான பிரம்ம தேவருக்கு மிக முக்கியமாக மூன்று இடங்களே உண்டு. இதற்கான காரணம் என்ன?
இந்து மதத்தில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்ம தேவர் எனும் மும்மூர்த்தி தத்துவத்தில், பிரம்ம தேவரிடமிருந்தே இந்த பிரபஞ்சமும் மற்றம் உயிரனங்கள் அனைத்தும் உருவானதாக சொல்லப்படுகிறது. மேலும் பிரம்ம தேவரே சப்தரிஷிகள் அல்லது ஏழு மஹா முனிவர்களை இந்த பிரபஞ்ச உருவாக்கத்தின் உதவிக்காக படைத்தார் என்றும் நம்பப்படுகிறது.
பிரம்ம தேவர் இந்த உலகத்தை படைத்த போது, இந்த உலகம் என்பது அவருடைய கால கணக்கின் படி அது ஒரே ஒரு நாளாக இருந்தது என்றும் அதாவது பிரம்ம தேவரின் ஒரு நாள் என்பது இந்து நாள்காட்டியின் படி 2,160,000,000 ஆண்டுகள் என சொல்லப்படுகிறது. அவர் உறங்க செல்கிற போது இந்த உலகம் அழிவை சந்திக்கும் என்றும் அவர் மறு முறை விழித்தெழுகிற போது இந்த உலகம் மீண்டும் புதிதாக உருவாக்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.
படைப்பின் அரசனாக திகழக்கூடிய பிரம்ம தேவருக்கு ஏன் வெகு குறைந்த கோவில்களே உள்ளன என்பதே அனைவர் மனதிலும் எழும் கேள்வி.
புராணங்களின் படி பிரம்ம தேவர் எந்த சிந்தனையும் இன்றி தன்னை நினைத்து ஒருமித்த சிந்தனையுடன் தவம் புரிபவர்களின் தவ வலிமையால் மிக எளிதாக ஈர்க்கப்பட்டு வரங்கள் அளிப்பதில் மிக தாரளமானவராக இருந்து வந்துள்ளார். பாதுகாப்பு குறித்த பிரஞ்ஞையின்றி அசுரர்களுக்கு மிக அலட்சியமாக வரங்களை அளித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஹிரன்யகஷிபு முதல் ராவணன் வரை அனைத்து கொடிய அசுரர்களும் பிரம்ம தேவரிடமே வரங்களை பெற்றனர். இதுவே உலகில் இருக்கும் உன்னத நற்பண்புகளை அழித்தத்தில் இவர்களை தனித்து பெயர் பெற செய்தது . பின்பு இவர்களை அழிப்பதற்கென்றே பல அவதாரங்களை எடுத்து வந்தார் மஹா விஷ்ணு.