ஆறு மாதங்களுக்கு பின்னரும் அணையாமல் எரியும் அதிசய தீபம் கேதார்நாத் ஆலயம்!

Update: 2021-12-16 00:30 GMT

இந்து கோவில்களில் மிக முக்கியமான தலம் கேதார்நாத் ஆலயம். இந்துக்கள் பலருக்கும் இருக்கும் ஆன்மீக விருப்பங்களில் இந்த இடத்தை தரிசிக்க வேண்டும் என்பதும் ஒன்றாக இருக்ககூடும். சிவபெருமானை மூலவராக கொண்ட இந்த கோவில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். இக்கோவில் இமயமலை சாரலில், மந்தாகினி நதிக்கரையில் உத்திரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இங்கு நிலவும் கடுமையான குளிரின் காரணமாக, இங்கு ஒரு விநோத பழக்கம் ஒன்று உண்டு. அதாவது ஏப்ரல் மாதம் அதாவது அட்சய திருதி தொடங்கி நவம்பர் மாதம் அதாவது கார்த்திகை பெளர்ணமி முடியும் வரை மட்டுமே பொது மக்கள் இத்தலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மற்ற ஆறு மாதங்களும் இங்கிருக்கும் திருவிக்ரகம் மலைக்கு கீழேவுள்ள குப்தகாசியில் உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த கோவிலை சாலை வழியே ஒருவர் நேரடியாக சென்றடைய முடியாது. இக்கோவிலை அடைய கவுரிகண்ட் என்ற பகுதியிலிருந்து 22 கி.மீ மலையேற்றம் செய்ய வேண்டும். இதற்கு குதிரை சேவைகளும் உள்ளன. இந்த கோவில் தேவாரம் பாடப்பெற்ற தலங்களுள் ஒன்றாகும். "கேதாரம் மேவி னானை " எனவும் "கேதாரமும் மாமேருவும் " எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார்.

புராணங்களின் படி இக்கோவிலை கட்டியது பாண்டவர்கள் என சொல்லப்படுகிறது. பாண்டவர்கள் சிவனின் பரிபூரண அருளை இங்கே தான் கடும் தவம் இயற்றினார்கள். வடக்கில் அமைந்துள்ள "சோடா சார்தம் " என சொல்லப்படக்கூடிய நான்கு முக்கிய சிவன் கோவில்களில் இது முக்கியமானது. 2013 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் பெருமளவு கோவில் வளாகம் பாதிப்புக்குள்ளானலும் கோவில் பெரும் சேதத்தை சந்திக்கவில்லை.

இக்கோவிலின் மற்றொரு அதிசயம் யாதெனில், நவம்பர் மாதத்தில் நடையை அடைக்கும் போது மிகபெரிய நெய்விளக்கொன்றை ஏற்றி கோவிலை மூடுகின்றனர். ஆறு மாதங்கள் கழித்து ஏப்ரல் மாதத்தில் அக்கோவிலை திறக்கும் போது அந்த தீபம் அணையாமல் எரியும் அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதுமட்டுமின்றி இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்தும் தலம் இது. மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகள் பலவும் அரங்கேறியது இந்த இடமே. அர்ஜூனன் சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெற்றது மற்றும் பாரத போருக்கு பின் சிவனை தரிசித்து முக்தி பெற்றது என எண்ணற்ற ஆச்சர்ய நிகழ்வுகளை கொண்டது கேதார்நாத் கேதாரீஸ்வரர் ஆலயம்.

Tags:    

Similar News