தமிழ் கடவுள் பழனி முருகன் கோயிலில் தொடங்கியது தைப்பூசத் திருவிழா!

தமிழ் கடவுள் பழனி முருகன் கோயிலில் தொடங்கியது தைப்பூசத் திருவிழா!

Update: 2021-01-22 10:03 GMT

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடு, திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி மலையில் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று உள்ளதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு தைப்பூச திருவிழா நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதற்காக பழனி முருகன் கோயிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்றும் விழாவில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போன்று ஜனவரி 27ம் தேதி வள்ளிதெய்வானை திருக்கல்யாணமும், 28ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் தற்போது இருந்தே காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக பழனி மலை முருகனை தரிசிப்பதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். இதே போன்று மற்ற தலத்தில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News