தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பு வழிபாடு.!

ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போன்று புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

Update: 2021-04-14 12:34 GMT

தமிழ் புத்தாண்டு இன்று தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.




 


இதில் ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதே போன்று புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

ஆனால் இந்த புத்தாண்டு கொரோனா தொற்று 2வது அலை பரவத்தொடங்கியுள்ளதால் பல்வேறு கட்டுப்படுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா தொற்றால் பக்தர்களின் வருகை குறைந்த அளவே காணப்பட்டது.

முககவசம் மற்றும் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Similar News