உங்களுக்கு பிடித்த இசைகருவியை சொல்லுங்கள் நீங்கள் யாரென சொல்கிறோம்!

Update: 2021-03-25 00:00 GMT

மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று இசை. ஒலியும், ஓசையும் ஆதியிலிருந்தே இருந்தது. மனதிற்கு இதம் தரும் இசை வடிவம் என்பது எப்போதுமே ஒரு ஆச்சர்யம் தான். இந்த ஒரு ஊடகத்தின் மூலம் மட்டுமே நாம் வார்த்தைகளின்றி உரையாட முடியும். ஆன்மாவிற்கான பல ஆறுதல்களை தேடிக்கொள்ள முடியும். மனிதர்களுள் என்னற்ற கலாச்சாரங்கள், பண்பாடுகள் உண்டு. அதில் அனைத்து அம்சங்களுடன் நம்மால் ஒத்து போக முடியாது. உதாரணமாக உணவு, உடை போன்றவை ஒருவருக்கு பிடிப்பது, நமக்கு பிடிக்காமல் போகலாம்.




 

ஆனால் இசை என்பது எல்லைகளற்றது. அவற்றால் வார்த்தைகளால் தூண்டமுடியாத உணர்வையும் தூண்ட முடியும். ஒரு நொடியில் ஒருவரை கரைந்து அழச்செய்ய முடியும். ஆர்பரித்து ஆனந்தத்தில் நடனமாட செய்ய முடியும். இது இசையின் பலம். வாக்கிங் செல்வது முதல், இரவு உறங்குவது இசையின் துணையுடன் பயணம் செய்பவர்கள் ஏராளம். இசையை அடிப்படையாக கொண்டு மனிதர்களின் பண்புகளை சில உளவியல் நிபுணர்கள் கண்டறிகிறார்கள். அதன் அடிப்படையில் சில குறிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்.

இசைக்கருவிகள் ஏராளம் இருக்கின்றன. இதில் வயலின் இசையை நீங்கள் அதிகம் விரும்புவர் என்றால், வயலின் இசையில் உங்கள் மனம் லயிக்கிறது எனில், "உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய என்ன தேவை என்பதை முன்கூட்டியே அறிந்தவராக நீங்கள் இருப்பீர்கள். இன்னும் சொன்னால், அந்த வெற்றிக்கு தேவையான அடிப்படை வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக்கூடியவராகவும் இருப்பீர்கள்.



அடுத்து ட்ரம்பட், இந்த கருவியை பயன்படுத்த கடுமையான மூச்சு பயிற்சி தேவை. உங்களுக்கு விருப்பமான இசை ட்ரம்பட் என்றால், அந்த கருவியின் பண்பை ஒத்ததே உங்களுடைய பண்பும். உங்களுடைய அதீத உற்சாகம் நீங்கள் இருக்கும் சூழலையே மகிழ்ச்சி மிகுந்ததாக ஆக்கிவிடும்.

அடுத்து புல்லாங்குழல் உங்கள் விருப்ப இசை மட்டும் இசைக்கருவி என்றால், அந்த கருவியை மூச்சினை கொண்டு கையாள கற்று கொண்டுவிட்டால் அந்த கருவியின் மூலம் ஒரு அழகிய இசையை வெளிப்படுத்துவது சுலபம். அதை போலவே, மற்றவர்களால் முடியாது என கைவிட்ட பணியாக இருந்தாலும் ஒருபோதும் நீங்கள் எந்தவொரு வேலையையும் கைவிடுவதில்லை. தொடர்ந்து போராடுவீர்கள், அந்த விஷயத்தில் உச்சம் தொடுவீர்கள்.

இவையெல்லாம் ஒரு யூகம் மட்டுமே. பொதுவாக சொல்லப்படும் யூகங்கள். ஒவ்வொரு தனிமனிதருக்கும் அவருக்குரிய தன்மைகள் மாறலாம் என்ற போதும். உளவியல் ரீதியாக பெரும்பாலும் இவை இசைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்

Tags:    

Similar News