தைப்பூசம்: பழனியில் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தோராட்டம்!

தைப்பூசம்: பழனியில் முக்கிய வீதிகளில் நடைபெற்ற தோராட்டம்!

Update: 2021-01-29 09:58 GMT

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதே போன்று இந்த ஆண்டுக்கான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. குறைந்த அளவிலான பக்தர்களே தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். 

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கப்பட்டது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

ஊர்க்கோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய தேரோட்டம் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்தனர். அப்போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வானை சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இந்த தேரோட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கோவில் இணைஆணையர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வருகின்ற 24ம் தேதி தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டுஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்யுங்கள் என பழனி கோவில் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

Similar News