மந்திரங்களுக்கு எல்லாம் முதன்மையான 'காயத்ரி மந்திரம்' - மகிமை என்ன?

மந்திரங்களுக்கு எல்லாம் முதன்மையான காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதனால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றி காண்போம்.

Update: 2023-08-31 03:45 GMT

படைப்பு கடவுளான பிரம்மதேவன் கரம் என்ற புண்ணிய பூமியில் நடத்திய யாகத்தின் போது தன்னுடைய சக்தியால் காயத்ரி தேவியை தோற்றுவித்ததாக கூறப்படுகிறது இந்த காயத்ரி தேவி ஐந்து முகங்களையும் 10 திருகரங்களையும் கொண்டவள் காயத்ரி மந்திரம் அனைத்து மந்திரங்களிலும் மேலானதாக விளங்குகிறது என வேதான் பகவத் கீதையில் கிருஷ்ணர்' நான் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறுகிறார்.


காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவர்களை  காப்பாற்றுவது என்று பொருள். 

'ஓம் பூர் புவஸ்வக

தத்ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோயோந பிரசோதயாத்'

என்ற காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு அனைத்து விதமான ஆபத்துகளும் நீங்கும். பயம் என்பதை அறியாதவர்களாக அவர்கள் மாறுவார்கள். காயத்திரி மந்திரம் உச்சரிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்திரிக்கு தான் முதன்மையான இடம் .


இந்த மந்திரத்தில் முதல் பாதமான 'தத்ஸவிதுர் வரேண்யம்' என்பது ரிக் வேதத்தில் இருந்தும்,'பர்கோ தேவஸ்ய தீமஹி',  'தியோயோன பிரசோதயாத்' என்ற வார்த்தை சாம வேதத்தில் இருந்தும் எடுக்கப்பட்டு ஒரே மந்திரமாக அருளப்பட்டுள்ளது. ஆவணி அவிட்ட நாளிற்கு அடுத்த நாள் காயத்ரி ஜெபம் என்ற தினம் வருகிறது . இந்த நாளில் காயத்ரி மந்திரத்தை இடைவிடாது 108 அல்லது 1008 முறை காலை , நண்பகல், மாலை ஆகிய மூன்று வேலையும் உச்சரிப்பதால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கப்பெறும். காயத்ரி ஜெபம் செய்யாத எந்த ஜெபமும் ஆராதனையும் பயனற்றது .


மனம் ஒருபுறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடைக்காது. காலையில் கிழக்கு முகமாக சூரியனை பார்த்து நின்று  இரு கைகளையும் முகத்திற்கு எதிராக கூப்பிக்கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிகொண்டும், மாலை மேற்கு முகமாக அமர்ந்து கொண்டு கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக்கொண்டும் ஜெபம் செய்ய வேண்டும். தெற்கு நோக்கி நிலையில் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க கூடாது.

Similar News