நவக்கிரகங்கள் வாசம் செய்யும் அகல் விளக்கின் மகிமை
நாம் ஏற்றக் கூடிய அகல்விளக்கில் நவகிரகங்களும், வாசம் செய்வதாக ஐதீகம் விளங்குகிறது.
இறைவனை நினைத்து வழிபடுவதற்கு காணிக்கை, நேர்த்திக்கடன் என்று அள்ளி வழங்க தேவை இல்லை . ஒரு காரியம் நிறைவேற , துன்பங்கள் விலக, சங்கடங்கள் இருந்தாலும் அவை வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டின் பூஜை அறையிலோ கோவிலில் இறைவன் சன்னதி முன்பாகவோ அகல் விளக்கு ஒன்றை ஏற்று வழிபட்டால் போதுமானது இந்த அகல் விளக்கில் நவகிரகங்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
அகல்விளக்கு - சூரியன்
நெய் அல்லது எண்ணெய் - சந்திரன்
திரி - புதன்
விளக்கில் எரியும் சுடர் - செவ்வாய்
சுடரில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
சுடரின் கீழே விழும் நிழல் - ராகு
தீபத்தால் பரவும் வெளிச்சம் - கேது(ஞானம்)
எரிய எரிய திரி குறைவது - சுக்கிரன்(ஆசை)
சுடர் அணைந்ததும் இருக்கும் கருமை சனி
இப்படி ஒரு அகல் விளக்கில் நவகிரகங்களும் வாசம் செய்கின்றன. நாம் ஆசையை குறைத்துக் கொண்டால் வாழ்வில் இன்பம் எனும் வெளிச்சம் பரவும் என்பதே அகல் விளக்கு ஏற்றுவதன் தத்துவம்.