ஆயிரமாண்டு அதிசயம் - ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் ஏழு சிவன் கோவில்கள்.!

ஆயிரமாண்டு அதிசயம் - ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் ஏழு சிவன் கோவில்கள்.!

Update: 2020-11-19 05:30 GMT

இன்று புகழ்மிகு சிவாலயங்களாக இருக்கும் அனைத்தும் பிரமாண்ட கோவில்களும் ஆயிரமாண்டுக்கு முன்பே கட்டப்பட்டது. குறிப்பாக இந்த கோவில் சாட்டிலைட் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கண்டறியப்படாத காலத்தில் கட்டப்பட்டவை. அளவீடுகளை அளவிடும் கருவி கூட இல்லாத காலத்தில் குறிப்பிட்ட ஏழு கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது இன்றளவும் அமைந்திருக்கும் அதிசயம்.

வடக்கே அமைந்திருக்கும் கேதர்நாத் துவங்கி தெற்கே அமைந்திருக்கும் ராமேஸ்வரம் இடையில் இருக்கும் மற்ற ஐந்து கோவில்களும் ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

வடக்கே அமைந்திருக்கும் கேதார்நாத் கோவிலின் காலேஸ்வரம் ஆலயம் இங்கே சிவபெருமானும் இருக்கிறார், யம தர்மராஜவும் இருக்கிறார். இந்த கோவிலுக்கும் தெற்கே இறுதியில் அமைந்திருக்கும் ராமேஸ்வரத்தின் ராமநாதசுவாமி கோவிலுக்கும் இடையே ஆயிரமாயிரம் மைல்கள் தொலைவு தூரம் இருக்கிறது. இந்த கோவில்களை கட்டியவர்கள் வெவ்வேறு மனிதர்கள் ஆனால் எப்படி ஒரே தீர்க்க ரேகையில் அமைத்தார்கள்?

இந்த இருக்கோவில்களுக்கு இடையே அதே நேர்கோட்டில் அமைந்திருக்கும் மற்ரா ஐந்து கோவில்கள் சிவ பெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்கள் என ஆழைக்கப்படுகிறது. ஶ்ரீ காலஹஸ்தி கோவிலில் அசையும் விளக்குகள், வாயு லிங்கத்தை குறிக்கின்றனர். அதாவது வாயு. திருவானைக்காவல் கோவிலில் இருக்கும் நீர் நிலைகள் கோவிலுக்கு நீருடன் இருக்கும் தொடர்பை அடையாளப்படுத்துகிறது. இந்த கோவில் நீருக்கான அடையாளம்.

அண்ணாமாலையார் கோவிலில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், சிவபெருமான் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பின் பிம்பமாக இருப்பத்தை உணர்த்துகிறது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சுயம்பு லிங்கத்தின் மணல் சிவபெருமானுக்கு பூமியுடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எந்த ரூபமுமின்றி அரூபமாக தில்லையில் நட்டம் ஆடும் நடராஜர் உருவமற்று இருப்பதால் அந்த ஸ்தலம் ஆகாயத்தின் குறியீடாக உள்ளது.

இன்றளவும் ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களுக்கு இந்த மர்மம் பிடிபடவேயில்லை. ஆனாலும் நம் ஆன்மீக முன்னோர் எப்படி இப்படி துல்லியமான கட்டுமாணத்தை நிர்மாணித்தார்கள் என்பது உலகமே வியந்து பார்க்கும் அம்சம்.

ஒரே நேர்கோட்டில் அமைந்த அந்த ஏழு கோவில்களின் வரிசை இதோ:

  1. கேதார்நாத் – கேதார்நாத் கோவில் (79.0669)
  2. காலேஸ்வரம் – காலேஸ்வரம் முக்தீஸ்வரா சுவாமி கோவில் (79.9067)
  3. ஶ்ரீ காலஹஸ்தி - ஶ்ரீ காலஹஸ்தி கோவில் (79.698410)
  4. காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோவில் (79.699798)
  5. திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோவில் (79.067694)
  6. சிதம்பரம் – நடராஜர் கோவில் (79.693559)
  7. ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி கோவில் (79.3174)

Similar News