நெற்றியில் திருநீறு குங்குமம் போன்ற மங்கல பொருள்கள் அணிவது எதனால்?
எதற்காக நாம் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் அணிந்து கொள்கிறோம் என்பதின் தத்துவம் பற்றி காண்போம்
விபூதி, திருநீறு எனப்படுவது சர்வ மங்கலங்களையும் அளிக்கக்கூடியது. பஸ்ம ஜாபால ஒப்பந்தத்த முதலான நூல்களும், மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருஞானசம்பந்தரின் பதிகமும் திருநீற்றின் பெருமையை விரிவாகவே சொல்கின்றன. இன்னும் அழகாக சொல்லுபவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
"வீட்டில் வளர்க்கும் செடி கொடிகளில் பூச்சி வந்தால் அடுப்பு சாம்பலை எடுத்து அவற்றின் மீது தெளிப்பார்கள். பூச்சிகள் போய்விடும் .செடி கொடிகள் பாதுகாக்கப்படும். சாதாரண அடுப்பு சாம்பலுக்கே அந்த ஆற்றல் என்றால் விதிப்படி தயாரிக்கப்படும் திருநீற்றுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் .திருநீரை அணிபவர்கள் ஆரோக்கியமும் மன அமைதியும் பெறுவார்கள்" என்று சொல்வார். மஞ்சள் கலந்து முறைப்படி தயாரிக்கப்பட்ட குங்குமம் திருஷ்டி முதலான தோஷங்களையும் பில்லி சூனியம் முதலான தீமைகளையும் தடுக்க கூடியது.