பரசுராமருக்காக ஆலயம் அமைந்த ஒரே இடம்

திருமாலின் ஆறாவது அவதரமான பரசுராம அவதாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. பரசுராமருக்கு என்று ஆலயம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அமைந்துள்ளது. அதைப்பற்றி காண்போம்

Update: 2023-07-11 04:30 GMT

கேரளாவில் திருவல்லம் என்ற இடத்தில் அமைந்துள்ளது பரசுராமர் கோவில். தென்னிந்தியாவின் மிக பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. 'பரசுராம சேத்திரம்' என்று அழைக்கப்படும் இது கேரளாவில் பரசுராமருக்காக அமைந்த ஒரே ஆலயம் என்றும் கூறப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த ஆலயம் தேசிய நினைவு சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்ற தொன்மையான கோவிலாகவும் அறியப்படுகிறது. இந்த ஆலயத்தை திருவிதாங்கூர் தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. இந்த ஆலயம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமாகவும் கருதப்படுகிறது.


இந்த தினத்தில் கேரளத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்படும். அன்றைய தினம் இங்கு பாயும் கரமனை ஆற்றில் குளித்துவிட்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பார்கள். திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவல்லத்தில் கரமனை ஆற்றின் கரையில் பரசுராமர் கோவில் உள்ளது.

Similar News