மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் உணர்த்தும் உண்மைகள்!

மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு அனைவரையும் காக்கக்கூடிய பேராற்றல் கொண்டவர். அவரின் 10 அவதாரங்களின் நோக்கம் பற்றி காண்போம்.

Update: 2024-02-12 05:15 GMT

1.மச்ச அவதாரம் : உலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம் தான். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது மச்சாவதாரம்.

2.கூர்ம அவதாரம் :reptiles ஊர்வன அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். இதனை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது கூர்ம அவதாரம்.

3.வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம் பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி விலங்கு உயிரினம்.

4.நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன். பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் இது.

5.வாமண அவதாரம்- குள்ள மனிதன் பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்.

6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.

7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை எடுத்துரைக்கிறது.

8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.

9. கிருஷ்ண அவதாரம்- சமூகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள், தர்மம், அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.

10.கல்கி அவதாரம் – எப்போது எந்த நோக்கத்தில் எதனை உணர்த்த இந்த அவதாரம் எடுக்கப்படும் என்பதை நாம் பகவானிடத்திலேயே முழு உள்ளத்துடன் சமர்பிப்போம்.வட இந்தியர்கள் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.


Similar News