வருடத்திற்கு 8 மில்லியன் பக்தர்கள் வருகை புரியும் இந்தியாவின் அதிசய வைஷ்ணவோ தேவி கோவில்.!

வருடத்திற்கு 8 மில்லியன் பக்தர்கள் வருகை புரியும் இந்தியாவின் அதிசய வைஷ்ணவோ தேவி கோவில்.!

Update: 2020-11-28 05:30 GMT

சிவபெருமானின் தன்மையில் ஓர் பாகமாக இருக்கும் உமையாளுக்கென்று இந்தியாவில் கட்டப்பட்ட முக்கியமான மற்றும் புனிதமான கோவில்களில் மிக முக்கியமானது வைஷ்ணோ தேவி கோவில். இந்த அழகு வாய்ந்த கோவில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் கண்ணை கவரும் வகையான ரம்மியமான அழகுடன் அமைந்துள்ளது.

இங்கு வந்து தேவியை வழிபடும் மக்கள் பார்வதி தேவியை மாதா ராணி என்ற பெயரிலும் மற்றும் வைஷ்ணவி என்ற பெயரிலும் வழிபடுகின்றனர். இங்கு கோவில் கொண்டிருக்கும் தேவி இந்த ரூபத்திலேயே இங்கு வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. துல்லியமாக இதன் இட அமைப்பை சொல்லவேண்டுமெனில்  இக்கோவில் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் உலகின் எல்லா திசைகளிலிருந்து இங்கு வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 8 மில்லியன் என பதிவுகள் சொல்கின்றன. திருப்பதிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக பக்தர்களின் வரவை பெரும் கோவிலாக வைஷ்ணோ தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் இருக்கும் வைஷ்ணவோ தேவி குறித்து பல புராண கதைகள், நாட்டுபுற கதைகள், செவிவழி கதைகள் சொல்லப்படுவதுண்டு. அதில் மிகவும் பிரபலமானது,

பூலோகத்தில் அரக்கர்களின் அட்டூழியம் பெருகியிருந்த வேளையில், அவர்களை அழிக்க மஹாசக்தியின் மூன்று ரூபங்களான மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி ஆகிய மூன்று ரூபங்களையும் ஒருங்கே ஒன்றிணைத்து சக்திகள் அனைத்தையும் திரட்டி அரக்கர்களை அழித்த போது. அந்த அதீத ஆற்றலின் தேஜலிருந்து ஒரு அழகிய இளம் பெண் உருவானதாகவும், அவரே வைஷ்ணவி தேவி என்ற கதை சொல்லப்படுகிறது.

மற்றொரு கதை வைஷ்ணவோ தேவி தென்னிந்தியாவில் ரத்னாகர் என்பவருக்கு மகளாக பிறந்ததாகவும் பின் 9 வயதில் விஷ்ணு பெருமானை நினைத்து கடும் தவம் இயற்ற தந்தையிடம் அனுமதி கோரி கடற்கரையில் அமர்ந்திருந்த போது அவர் தவத்தை மெச்சி, அப்போது ராவண வதத்தில் இருந்த ராமன் தன்னுடைய வாணர சேனையுடன் காட்சி அளித்து மேலும் இன்று இருக்கும் குகையை சுட்டி காட்டி அதுவே தவம் புரிய ஏதுவான இடமென சொல்லி தன்னிடமிருந்த சேனைகளிலிருந்து சிலவற்றையும் புலி வாகனத்தையும் வழங்கியதாக சில குறிப்புகள் உண்டு.

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ 

Similar News