உலகம் எல்லையற்றது - விளக்கும் 'நவகுஞ்சரம்'

இந்த உலகத்தில் நாம் கண்களால் கண்டது மட்டும்தான் இருப்பதாக எவரும் நினைக்கக் கூடாது என்பதை விளக்கக் கூடிய 'நவ குஞ்சரம்' எனும் பறவையை பற்றிய மகாபாரத கதை.

Update: 2023-04-19 05:30 GMT

மகாபாரதம் என மிகப் பெரிய இதிகாசத்தில் ஓர் இடத்தில் 'நவ குஞ்சரம்' எனும் விசித்திரமான பறவையை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான சரளதாசர் என்பவர் எழுதிய மகாபாரத கதையயில்தான் தான் இந்த 'நவகுஞ்சரம்' பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது. நவ என்பது 9 என்ற எண்ணை குறிக்கும். நவ குஞ்சுரம் என்பது வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் இணைந்த ஒரு அபூர்வ உயிரினத்தை குறிப்பதாகும். சேவலின் தலை, மயில் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை புலி மற்றும் மானின் கால்கள், மனிதனுடைய கை ஆகிய இவை அனைத்தும் இணைந்த உயிரினமே 'நவ குஞ்சரம்'.


ஒருமுறை வனத்திற்கு சென்ற அர்ஜுனன் அங்கு மலை மீது அமர்ந்து கடுமையான தவம் புரிந்தார். அப்போது கிருஷ்ணர் நவகுஞ்சரம் உருவம் கொண்டு அர்ஜுனனின் முன்பாக வந்த நின்றார். ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அர்ஜுனன் தன் அருகில் இருந்த வில்லை எடுத்து அதில் அம்பை பொருத்திய பின்னர் தன்னுடைய கண்களை திறந்து பார்த்தான் . அப்போது தன் எதிரில் நின்ற அதிசய உயிரினத்தை கொண்டு ஆச்சரியமடைந்தான். திகைக்கவும் செய்தான்.


அந்த உயிரினத்தின் மனித கையில் ஒரு தாமரை பூ இருந்தது. அதை பார்த்து அர்ஜுனனுக்கு ஒரு முறை கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. "மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஆனால் உலகமோ எல்லையற்றது" என்ற அந்த வார்த்தையின் உண்மையை அர்ஜுனன் உணர்ந்தான். இந்த உலகத்தில் நாம் கண்டது மட்டும்தான் இருப்பதாக எவரும் நினைக்கக் கூடாது. இதுவரை பார்த்திராத ஒரு உயிரினம் இன்னும் கூட இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று அர்ஜுனன் புரிந்து கொண்டான் .


தன்னை சோதிப்பதற்காக கிருஷ்ணரே இந்த உருவத்தில் வந்ததாக உணர்ந்த அர்ஜுனன் தன் கையில் இருந்த வெள்ளை கீழே போட்டுவிட்டு நவ குஞ்சரத்தை வணங்கினான் என்கிறது அந்த மகாபாரத கதை. ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஓவிய பாணியான 'படா சித்ரா' ஓவியத்தில் 'நவகுஞ்சரம்' பல வகைகளில் எல்லாம் வரையப்படுகிறது . பூரி ஜெகன்நாதர் கோவிலின் வடக்கு புறத்தில் 'நவ குஞ்சரத்தின்' உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

Similar News