கடின உழைப்பு ஒன்றே பணத்தை பெருக்கும். அற வழியில் ஈட்டிய பணம் மட்டுமே நீடித்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இருப்பினும் இயற்கையை வசப்படுத்துவதன் மூலம் பணத்தை ஈர்க்க முடியும் என்கின்றன சில சாஸ்திரங்கள்.
உதாரணமாக, பணத்தை கிழக்கு நோக்கிய பெட்டியில் வைப்பது உங்கள் பொருளாதாரத்தை அதிகப்படுத்துமாம். மேற்கு நோக்கிய வகையில் உங்கள் நகைகளையும் மற்றும் முன்னோர்களின் உடமைகளையும் வைப்பது மிகுந்த சிறப்பை தரும். வடக்கு நோக்கியவாறு திறக்கும் விதம் கொண்ட அலமாரிகளில் நகை மற்றும் பணத்தை வைக்கலாம். அதுவே பணத்திற்கான சரியான பகுதி, இவ்வாறு செய்வதன் மூலம் பணம் ஒருபோதும் குறைவிலாது இருக்கும் என்பது நம்பிக்கை.
எனில், பணத்தையும் நகையையும் தென் புறத்தில் வைக்க கூடாதா? என்ற கேள்வி எழும். வைக்கலாம். ஆனால் அவ்வாறு வைப்பதால் நமக்கு எந்த வித தீமையும் நிகழாது, ஆனால் அதே நேரத்தில் எந்தவித நன்மையும் நிகழாது என்பது தான் தென்புறம் குறித்து சொல்லப்படும் குறிப்பு.
வீட்டின் பணப்பெட்டியை, அலமாரியை ஒருபோது படிகட்டுகளின் கீழோ அல்லது கழிவறை முன்பாகவோ வைக்க கூடாது. மேலும் பணம் வைக்கும் பகுதியை மிகவும் தூசு நிறைந்ததாக வைத்திருக்க கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்க கூடும். மேலும் பணம், நகை இருக்க கூடிய இடத்தில் இரு யானைகள் தந்தம் உயர்த்தியவாறு இருக்கும் இலட்சுமி படத்தை வைத்திருந்தால் அது செல்வம் மிகுவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
சீன தாவரமான ஜெட் தாவரத்தை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்து வர நல்ல சுற்றுச்சுழலை அது உருவாக்கி பண வரவிற்கு வழிவகுக்கும் என சொல்லப்ப்படுகிறது. மேலும் தென் கிழக்கில் நீர் தொடர்பான அலங்கார பொருட்கள் உதாரணமாக சிறிய நீர் தொட்டி அல்லது பவுண்டைன்கள் அல்லது மீன் தொட்டிகளை வைக்கலாம்.
பவுண்டைன் போன்றவைகளை வைக்கிற போது அதில் தொடர்ச்சியாக நீர் வரத்து இருக்கிறதா, அவை சுத்தமாக இருக்கின்றனவா என்பதை உற்தி செய்தல் அவசியம். வீட்டை சுற்றி அல்லது உணவு அறையை சுற்றி காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் படங்களை வைக்கலாம். இது உணவு தொடர்பான உணர்வுகளை நம்மிடம் ஊக்கப்படுத்தும் இதன் மூலம் உணவு குறைவிலாது இருக்கும் என்பது நம்பிக்கை