வீட்டில் விளக்கேற்றும் போது பெண்கள் செய்யக்கூடாதவை!

காலை மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றுவது நன்மை பயக்கும். அவ்வாறு விளக்கேற்றும்போது பெண்கள் செய்யக்கூடாதவை பற்றி காண்போம்.

Update: 2023-09-26 06:15 GMT

விளக்கு ஏற்றி சில நிமிடங்களிலே அதை அணைக்கக் கூடாது. சிறிது நேரம் ஒளிர வேண்டும்.தலை முடியை கட்டாமல், அவிழ்த்து விட்ட நிலையில் பெண்கள் விளக்கேற்றக் கூடாது.விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக் கூடாது. வாயால் ஊதியும் தீபத்தை அணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்கலாம்.


வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றினால் கடன்கள் பெருகும்.தெற்கு திசையில் பொதுவாக தீபம் ஏற்றக் கூடாது.தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக குளிர விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். 

Similar News