மூன்று வாசல்கள் கடந்தால் மட்டுமே முழு ரூபத்தை தரிசிக்க முடியும் அதிசயம்.
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில்
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவாதாக எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், 16008 சாளக்கிராம கற்களால்லும், கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையாலும் செய்யப்பட்டவர்.
தெற்கே தலை வைத்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்தாவரே மேற்கு நோக்கி அருள் புரிகிறார். பிரமாண்ட திருமேனியாக ஆழ்துயிலில் இருக்கும் இந்த பெருமாள் திருமேன்னி 22 அடி நீளம் உடையது. இவரை ஒரே காட்சியில் தரிசிக்க இயலாது. இவரை முழுவதும் தரிசிக்க மூன்று வாயல்களை தரிசிக்க வேண்டும். இதனை திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்று அழைக்கப்படுகிறது திருக்கர வாயிலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.
இங்குள்ள பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது . இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் கலவையால் செய்யப்பட்டிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவருக்கே செய்யப்படுகிறது.
இங்கு பள்ளி கொண்டுள்ள ஆதிகேசவரின் திருப்பாதத்தை வட்டமிட்ட வாறு பரளியாறு ஓடுவதால், இந்த ஊருக்கு திருவட்டாறு என்று பெயர். கேசன் என்ற அசுரனை விஷ்ணு பெருமான் அடக்கிய தலம் இதுவென புராணங்கள் சொல்கின்றன.