ஒரே ஆலயத்தில் மூன்று அனுமன் - எந்த கோவில் தெரியுமா?
ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு கோவிலில் ஒரே ஆலயத்தில் 3 அனுமன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று. இந்த ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோவில். இங்கே மூன்று ஆஞ்சநேயர்களை நாம் தரிசிக்க முடியும். வால் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பிய நிலையில் உள்ள ஒரு அனுமன் இவ்வாலயத்தின் மூலவராக காட்சியளிக்கிறார். சீதை மணலில் செய்து வைத்த லிங்கத்தை தன் வாலால் அகற்ற எண்ணும்போது அனுமனுக்கு வால் அருந்ததாகவும் அந்த கோலத்தில் இங்கே அருள்வதாகவும் சொல்லப்படுகிறது.
இவருக்கு அருகில் அபய, ஹஸ்த கோலத்தில் உள்ள அனுமனை தரிசிக்கலாம். இவரது உருவம் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டது. இந்த கோவிலின் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த வளாகத்தில் கடல் மண்ணால் உருவான சுயம்பு அனுமன் வீற்றிருக்கிறார். எனவே இந்த கோவிலில் மூன்று அனுமன் வடிவங்கள் வீற்றிருக்கின்றன.