துளசியும் ஆன்மீகமும். அதை முறையாக கையாளும் விதமும்!!!
இந்து மரபில் துளசி செடிக்குறித்த பலவிதமான தெய்வீக நம்பிக்கைகள் உண்டு.
இந்து மரபில் துளசி செடிக்குறித்த பலவிதமான தெய்வீக நம்பிக்கைகள் உண்டு. அந்த வகையில் துளசியை வளர்க்ககூடிய வீடுகளில் நிலவும் நம்பிக்கை யாதெனில், துளசி இருக்கும் இடம் தெய்வம் இருக்கும் இடம் ஆகும். அங்கே எந்த விதமான நோய்களும், யம பயமும் இன்றி ஒருவர் பரிபூரண நல்வாழ்வை வாழ முடியும் என்பதே.
துளசியை வெறும் செடியாக கருதாமல் தெய்வீக அம்சமாக ஏன் தெய்வமாகவே பாவித்து பூஜைகள் செய்யும் வழக்கம் நம்மிடையே உண்டு. இன்று தமிழகத்தில் இருக்க கூடிய முக்கிய கோவில்கள் பெரும்பாலானவற்றில் துளசி செடியை ஒருவர் கட்டாயம் காண முடியும். அனைத்து விதமான பூஜைகள், வழிபாடுகளில் இந்த புனித துளசி இடம் பெறாமல் இருப்பதில்லை. சிவன் வழிபாட்டை தவிர மற்ற வழிபாடுகளில் துளசிக்கு நிச்சயம் இடம் உண்டு. மிக முக்கியமாக பெருமாள் கோவில்களில் துளசிக்கு அதீத முக்கியத்துவம் உண்டு.
சிவபெருமான் துளசியின் கணவரான அசுரர் ஜலந்தரை வதம் செய்ததால் . அந்த ஆற்றாமையில் துளசி தேவி, தன்னுடைய இலையை கொண்டு சிவபெருமானை வழிபடக்கூடாது என சாபமிட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
எனவே மிகவும் புனித்ததுவமும், சக்தியும் நிரம்பிய துளசியை வெறுமனே யாரும் பறித்துவிடக்கூடாது. தெய்வாம்சம் பொருந்திய இலை என்பதால், அதனை பறிப்பதற்கென்று சில வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஏகாதசி நாட்களில், இரவு நேரங்களில் சந்திர மற்றும் சூரிய கிரகணத்தின் போது துளசி இலையை பறிக்க கூடாது. மேலும், இலையை பறிப்பதற்கு முந்தைய நாள் மாலை, செடியின் அருகே தீபமேற்றி வணங்க வேண்டும். இதன் தார்ப்பரியம் யாதெனில், அந்த இலையை பறிக்க அனுமதிகோரும் பொருட்டு இந்த தீபம் ஏற்றப்பட வேண்டும்.
எந்த காரணமும் இன்றி துளசியை பறித்து வீண் செய்யக்கூடாது. ஆன்மீக வழிபாடுகளுக்கு பயன்படுத்தலாம் அல்லது ஆரோக்கியம் கருதி அதிலிருக்கும் மருத்துவ குணங்களுக்காக துளசியை முறையாக பயன்படுத்தலாம். இலைகளை பறிக்காமல் விடுகிற போது அவை காய்ந்து சருகாகும். எந்தவொரு காலகட்டத்திலும் துளசியை தேவையின்றி பறித்தல் கூடாது. அவை சருகாகி உதிர்கிற போது, அந்த உதிர்ந்த துளசி இலைகளை மீண்டும் அந்த மண்ணினுள்ளே போட்டு விடலாம்.
ஒருவேளை, மொத்த செடியும் காய்ந்துவிட்டால் அதனை புனித நதி, அல்லது ஆற்றில் போட்டுவிடலாம். காய்ந்த துளசி செடியை வீட்டில் வைக்க கூடாது.
Image Source : istock, Pinterest