அனைத்து நலனும் அருளும் ஆருத்ரா தரிசனம் காண வேண்டிய நேரம் எது?

Update: 2023-01-05 13:30 GMT

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்று ஆருத்ரா தரிசனம். சிவபெருமானின் தெய்வீக நர்த்தன தரிசனத்தை உலக மக்கள் கொண்டாடி வணங்கும் நாள் இது. இந்த பண்டிகை திருவாதிரை என அழைக்கப்படுவதுண்டு.

மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பதை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கிறோம். இந்த புண்ணிய நாளில் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள நடராஜர் திருவுருவத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம்.

திருவாதிரை விரதம் அனுசரிக்கும் அனைத்து இல்லங்களிலும் இந்த புனித நாளில் சிறப்பு நெய்வேத்யம் படைக்கபடுவதுண்டு இதற்கு திருவாதிரை களி என்று பெயர். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் 8 முக்கிய விரதங்களில் மிக முக்கியமானது திருவாதிரை விரதம். மேலும் திருவாதிரை என்பது நடராஜருக்கு உரிய நட்சத்திரம் என்றும், ஆண்டின் மிக நீளமான இரவை கொண்டது இந்த நாள் என்றும் அறிஞர்கள் சொல்கின்றனர்.

திருவாதிரை என்ற சொல்லும் பிரம்மாண்டமான கடல் அலை என்று பொருள். சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய போது எழுந்தது என்றும் பொருள் சொல்வர். கேரள மக்களாலும் மற்றும் தமிழ் பேசும் இந்துக்கள் குடியிருக்கும் அனைத்து ஊர்களிலும், நாடுகளிலும் இந்த ஆருத்ரா தரிசனம் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் ஆதியும் அந்தமும் அற்றவர், எல்லையில்லா பரம்பொருள் அவருக்கு பிறப்பும் இறப்பும் இல்லை. அப்படியிருக்க, அவருக்குரிய நட்சத்திரம் என்று ஒன்று இல்லை. இப்படியான சூழலில் விஷ்ணு பெருமான் துயில் கொண்டிருக்கும் ஆதிசேஷனுக்கு அய்யனின் திருநடனம் காணும் ஆசை வரவே அந்த ஆசையை விஷ்ணு பெருமானிடம் தெரிவித்தார். அதற்கு விஷ்ணு, உன் விருப்பம் ஈடேற சிதம்பரத்தில் தவம் புரிவாயக என பணித்தார். அதன் படி ஆதிசேஷன் சிதம்பரத்தில் கடும் தவம் புரிய, முனி வியகர பாதாவும் அய்யனின் தரிசனம் வேண்டி தவமிருக்க, இருவரின் தவத்தை மெச்சி தில்லையில் , திருவாதிரை நட்சத்திரத்தில் தன் தாண்டவத்தை நிகழ்த்தினார். மார்கழியின் பெளர்ணமி நாளில் திருவாதிரையில் நடன தரிசனம் நல்கியதால் அன்று முதல் இந்த நட்சத்திரமே நடராஜருக்கு உரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும் இந்நாள் பக்தர்கள் பெரு விமர்சையாக கொண்டாடும் நாளாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு திருவாதிரை நட்சத்திரம் இன்று இரவு 9.26 மணியில் தொடங்கி ஜனவரி 7 காலை 12 மணி வரை வரை வர இருக்கிறது. ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி நாளை தமிழகமெங்கும் இருக்கும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News