வீட்டின் வளம் பெறுக பூஜையறை எப்படி இருக்க வேண்டும்? வாஸ்து குறிப்புகள் !

Update: 2021-11-16 00:30 GMT

வீட்டில் எத்தனை அறைகள் இருந்தாலும், மிக முக்கியமான இடம் பூஜை அறைக்கு உண்டு. வீட்டின் ஆற்றல் மையம் என்றழைக்கலாம். மனதில் எழும் துக்கம் சந்தோஷம் என எந்த உணர்வாக இருந்தாலும் வீட்டில் உள்ள பூஜை அறையிலோ அல்லது சாமி படத்தின் முன்பாகவோ ஒரு தீபம் ஏற்றினால் கூட மனம் சற்று அமைதியடைவதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.

பூஜை அறை அல்லது கடவுளை வைப்பதற்கு சரியான இடம் வடகிழக்கு. சூரியனின் முதல் கதிர் பூஜையறையில் இருக்கும் கடவுளின் மீது விழுவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது . வாஸ்து சாஸ்திரத்தின் இந்த வடக்கிழக்கு மூலையை ஈசான மூலை என்கின்றனர். பூகோள ரீதியாக பார்த்தால் உலகின் காந்த ஆற்றல் நிறைந்த திசையாக இந்த திசை கருதப்படுகிறது. இங்கிருந்து தான் காந்த ஆற்றல் உற்பத்தியாகிறது என்கின்றனர். எனவே கடவுளின் இருப்பை இந்த இடத்தில் அமைத்தால் மிகவும் நன்மை தரும் என்கின்றனர் மூத்தவர்கள்.

இட வசதிகளுக்கு அப்பாற்ப்பட்டு, இடம் இருக்குமே ஆனால் ஒருவர் பூஜை அறையை படுக்கையறையில் மற்றும் சமையல் அறையில் வைப்பதை தவிர்க்கலாம். மேலும் பூஜையறையின் மேல் பகுதியில் வேறு எந்த அறையின் கட்டுமானமும் இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது. காரணம் இது நம் பூஜை அறையின் மேல் நம் கால் படுவதை போன்றதாகும். மற்றும், ஒரு சிலர் வீட்டின் படிகட்டுகளின் கீழ் உள்ள இடத்தில் பூஜை அறையை அமைப்பார்கள். இட வசதியை தவிர்த்து, நல்ல இடம் இருக்கும் வகையில் பூஜை அறையை படியின் கீழ் அமைப்பதை தவிர்க்கலாம்.

பூஜையறையில் தினசரி விளக்கேற்றுவதை வழக்கமாக்குங்கள். இது வீடு முழுவதிலும் ஒரு நல்ல ஆற்றலை பரப்பும். மேலும் செம்பு பாத்திரத்தில் சிறிதளவு நீர் வைப்பது நல்லது. அந்த நீரை தினசரி மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தளவு, இறந்தவர்களின் படங்களை பூஜையறையில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். அவர்களுக்கென வீட்டில் பிரத்யேகமான இடத்தை சுவற்றில் ஒதுக்கலாம்.

மேலும், பூஜையறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளின் முகம் கிழக்கு நோக்கியதாக இருப்பது மிகவும் சிறப்பு. முடிந்தவரை தெற்கில் கடவுளின் முகம் வருவதை தவிர்த்துவிடுங்கள். மேலும் பூஜையறையை சுத்தமாக வைத்திருத்தல் மிக மிக அவசியமான ஒன்று.

Image : Aanmeegam 

Tags:    

Similar News