நம் ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுடன் ஒன்று இசைந்து இருப்பதே ஆகும். இதனை நாம் பலவாறு உணர்ந்து கொள்ளலாம் என்றாலும். அதில் முக்கியமான ஒன்று தானம் அளிப்பது. தானம் அளிப்பதன் முக்கிய அம்சம் நியூட்டனின் விதி எனலாம். ஒவ்வொரு வினைக்கும் சரிசமான அல்லது எதிர்மறையான தாக்கம் இருக்கும் என்பார். நீங்கள் எதை அளிக்கிறீர்களோ அது பன்மடங்காக திரும்ப வரும் என்பது நம்பிக்கை.அது அன்பாக, மரியாதையாக, நன்றியாக, பணமாக உணவாக அல்லது எதுவாகவும் இருக்கலாம்.
எனில் இந்த தானத்தை செய்கிற போது நாம் நினைவில் கொள்ள சில விஷயங்கள் உண்டு. தானியம், நீர், ஆடை,அமரும் ஆசனம், பசுவுக்கு அல்லது குதிரைக்கு உணவு ஆகியவற்றை தானமளித்தால் எதிரியை கூடநண்பராக மாற்றும் வல்லமை அந்த தானத்திற்கு உண்டெனகிறது சாஸ்திரம். மேலும் இறப்புக்குபின்பான முக்திக்கு இவை வழிவகுக்கும். மேலும் உதவிதேவைப்படுவோரை நம் வீட்டிற்கு அல்லது நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து வழங்குவதைகாட்டிலும், உதவி தேவைப்படுவோரை நாம் தேடி சென்று உதவுவதே நமக்கு நன்மை பயக்கும்.
மேலும்பசுவுக்கு, அந்தணர்க்கு மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிக்கு உதவும் ஒரு நபரையாரேனும் ஏதேனும் காரணம் சொல்லி தடுத்தால் அவர்கள் கடுமையான கர்ம வினைக்கு ஆட்படுவார்கள்என்பது கூற்று. மேலும் எள்ளு,நீர் மற்றும் அரிசி ஆகிய தானத்தை பாத்திரத்தில் வைத்து வழங்காமல், கைகளால் வழங்க வேண்டும்.பெரிய அளவிலான பொருட்களை முழுமையாக கைகளால் வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும்,சாஸ்திரத்திற்காக முதலில் சிறிய அளவை நம் கைகளாலேயே வழங்க வேண்டும்.