இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் திருநின்றவூர் இருதயலீஸ்வரர்!
திருநின்றவூர் சிவன் திருத்தலத்தின் சிறப்புகள் பற்றி காண்போம்.
சென்னை நகரை அடுத்து உள்ளது ஆவடி என்ற தலம். இங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருநின்றவூர். இத்தலத்துக்கு ரயில் நிலையமும் உண்டு. இங்கே, ஈசன் இருதயலீஸ்வராகப் பேரருள் புரிகிறார். பூசலார் நாயனார் என்ற சிவனடியார் மானசீகமாகவே கயிலைநாதனுக்கு ஒரு கோயில் அமைத்து, கும்பாபிஷேகமும் செய்தார். அவரது இருதயத்தில் உருவான கோயில்தான் இந்த இருதயாலீஸ்வரர் கோயில்.
இருதய நோய் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு பௌர்ணமி அன்று வருகிறார்கள். உள்ளம் உருகும் வகையில் ஐயனைப் பிரார்த்தனை செய்து, அவருக்கு அபிஷேகமும் செய்து மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை சிலர் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு அவர்கல் கோயிலை விட்டு நீங்கும்போதே இருதயத்தின் ‘லப்&டப்,’ எந்த பிசிறும் தட்டாமல் ஒலிப்பதை அனுபவபூர்வமாக உணர்கிறார்கள்.