திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு கட்டாயம் கொரோனா சான்று.. தேவஸ்தானம் அறிவிப்பு.!
திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பக்தர்களுக்கு கூறியதாவது: ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (ஏப்ரல் 14ம் தேதி) முதல் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.
மேலும், கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்று வரவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.