ஐஸ்வர்யம் பெருக, வீட்டு வாயிலை இவ்வாறு அமைக்க வேண்டும்.!

ஐஸ்வர்யம் பெருக, வீட்டு வாயிலை இவ்வாறு அமைக்க வேண்டும்.!

Update: 2020-12-12 05:30 GMT

வீடுகளை அலங்கரித்தல் என்பது புதுமனை புகுவிழாவின் போது மட்டும் நிகழ்வதாக இல்லாமல், நம் கலாச்சாரத்தின் படி, வீட்டின் வாயிலை எப்போதும் மங்களகரமாக வைத்திருப்பது நமக்கு நன்மையை தரும். உதாரணமாக, நம்மில் பலர் வீட்டின் பிரதான கதவில் சுவஸ்திக், குபேரர் இலட்சுமி மற்றும் கணபதி ஆகிய தெய்வங்களின் படங்கள், வைத்திருப்பதை பார்க்கலாம்.

இது போன்ற புனித குறியீடுகளை வீட்டின் வாயிலில் வைப்பதன் பின்னிருக்கும் தார்பரியம் என்ன? ஒரு சில வீடுகளில் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பதை நாம் காண முடியும். சமஸ்கிருதத்தில் ஸ்வஸ்திக் என்றால் ஆசிர்வாதம் அல்லது புனிதம் என்று பொருள். எனவே இந்த சின்னத்தை வீட்டின் வாசலில் வைப்பதால், நல்லதிர்வுகளை இது வீட்டிற்கு அழைத்து வரும்.

மேலும், ஸ்வஸ்திக் என்பது மஹா விஷ்ணுவுடன் தொடர்புடைய 108 குறியீடுகளுள் ஒன்றாகும். ஸ்வஸ்திக் என்பது சூரியனையும் அவை தருகின்ற உயிர்ப்புமிக்க கதிர்களையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

அடுத்து வீட்டின் வாயிலில் குபேரர் படத்தை வைப்பதால் நலமும் வளமும் ஒரு சேர ஒரு வீட்டிற்கு கிடைக்கும் சாத்தியங்கள் உண்டு. அடுத்து, வீட்டின் வாயிலில் இலட்சுமி மற்றும் கணபதி இருவர் படத்தையும் இணைத்து வைப்பது ஒரு வீட்டின் நுழைவில், ஒரு இல்லத்தின் தொடக்கத்தை மிக அற்புதமானதாக தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்த அடையாளங்களும், குறீயிடுகளும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதை தாண்டி, வாஸ்து படி ஒரு வீட்டின் முகப்பு என்பது எப்போதும் சாலையோடு சமதளத்துடன் இருக்கலாம் அல்லது சாலையிலிருந்து சற்று உயர்வாக இருப்பது மிகுந்த நன்மையை தரும். ஆனால் ஒரு போதும் சாலையிலிருந்து இறங்கியிருக்க கூடாது.

மேலும் வாஸ்துவின் படி, முகப்பு சாலையிலிருந்து வீட்டிற்கு அமைக்கப்பட்ட படிகட்டுகள் ஒற்றை இலக்க எண்ணில் அமைந்தால் கூடுதல் சிறப்பு. வீட்டின் முகப்பும், முகப்பு கதவு எந்தவித சிராய்ப்பும், சேதாரமும் இன்றி பராமரிக்க வேண்டும். இந்த குறிப்புகள் அனைத்துமே வாஸ்து ரீதியாக நமக்கு நன்மை தரலாம், அல்லது சிலர்குரிய வினைபயன்படி செயல்படலாம். ஆனால் ஒரு நுழைவு வாயில் கண்களுக்கு இதமானதாக இருக்கும் பட்சத்தில் அவை நம் உளவியில் ரீதியாக மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Similar News