ஆணவம் அகற்றும் கூவம் திரிபுராந்தகர் திருக்கோவில்!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கூவம் கிராமம். இங்கு மிகவும் பழமை வாய்ந்த திரிபுராந்தகநாயகி உடனாய திரிபுராந்தக சுவாமி திருக்கோவில் உள்ளது.

Update: 2023-06-06 15:00 GMT

தாருகாட்ன், கமலாட்சன், வித்யூன் மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பொன் வெள்ளி இரும்பாலான கோட்டைகளை கட்டி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்தனர் . அந்த அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்ற முறையிட்டனர் . அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் ஒரு வில்லை ஏந்தி கொண்டு தேரில் புறப்பட்டு சென்றார் .


எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்பது நியதி. அது சிவபெருமானுக்கும் பொருந்தும். ஆனால் சிவபெருமாற் அதை செய்யாததால் தேரின் அச்சு முறிந்து தடை உண்டானது . அப்போது தேரின் கூறும் இத்தளத்தில் முறிந்து நின்றது. இது விநாயகர் செயல் என்பதை உணர்ந்த சிவபெருமான் விநாயகரை மனதில் நினைத்து பின் புறப்பட்டுச் சென்று அசுரர்களை அழித்தார் .


கூரம் பூமியில் பதிந்த இடத்தில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளியினார் .கூரம் முறிந்து நின்ற இடம் என்பதால் இத்தலம் கூரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கூவம் என்று ஆனது.  இறைவன் அசுரர்களின் ஆற்றலை ஒடுக்கியதோடு திரிபுரம் எனும் அந்த மூன்று நகரங்களையும் அழித்த காரணத்தினால் திரிபுராந்தகர் என பெயர் பெற்றார். மேலும் போருக்கு செல்லும்போது வில்லேந்திய கோலத்துடன் சென்றதால் 'திருவிற்கோல நாதர்' எனவும் பெயர் பெற்றார்.


சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவத்தின் போது மட்டுமே இத்தல  இறைவன் வில் ஏந்திய நிலையில் காட்சி தருவார். சிவபெருமானின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இந்த திருக்கோவிலின் உட்சுவற்றில் அருள்பாலிக்கும் விநாயகருக்கு 'அச்சிறுத்த விநாயகர்' என்று பெயர். திரிபுரங்களை எரிக்க இறைவன் தேரில் சென்ற போது விநாயகரை வணங்க மறுத்ததால் தேரின் அச்சினை விநாயகர் முறித்தார்.


இதனால் அவர் அச்சு முறித்த விநாயகர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி தற்போது அச்சிறுத்த விநாயகர் என்று வழங்கப்படுகிறது. தேர் நிலை கொள்ளாது விழுந்த இடம் அச்சிறுத்த கேணி எனவும் வழங்கி வருகிறது. இத்தல இறைவனை வேண்டிக் கொண்டால் ஆளுமை திறன் வளரும், தீய குணங்கள், ஆணவம் , துன்பம் நீங்கும். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும். பக்தர்கள் இத்தல இறைவனுக்கு இறைவிக்கும் புதிய ஆடை அணிவித்து அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

Similar News