இமயமலையில் முருகப் பெருமானுக்கு கோவில் - தமிழகர்கள் அறிந்து கொள்ள சிறப்பு

இமயமலை அடிவாரத்தில் முருகப்பெருமானுக்கு கோவில் தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தத் திட்டம்.

Update: 2022-10-26 02:25 GMT

இமயமலை அடிவாரத்தில் முருகப்பெருமாள் கோவில் ஓம் என்ற பிரணவ வடிவத்தில் காட்சியளிக்கிறது. இதன் சிறப்பை தமிழக பக்தர்கள் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை உத்தரகாண்ட் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசின் சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து துறை செயலாளர் அவர்கள் இது பற்றி சிறப்பு பேட்டி அளிக்கையில், இமயமலை மற்றும் கங்கை என்ற அடையாளப் படுத்தப்படுகிறது. சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இமயமலையில் உள்ளன.


மேலும் கோவில்களில் வழிபடவும், இயற்கைகளை ரசிக்கவும் ஆண்டுதோறும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். தமிழக மக்களிடம் ஸ்ரீகேதாரநாதர் கோவில் பற்றிய அறிமுகம் இருக்கிறது ஆனால் இங்கு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு ஆன்மீகத்திற்கு தளங்கள் இருக்கின்றது. குறிப்பாக மகாபாரத்தில் இடம் பெற்றுள்ள பாண்டவர்கள் கௌரவர்கள் ஆகியோரின் கோவில்களும் இங்குதான் உள்ளது.  


இங்கு எந்த வகையிலும் கேள்விப்படாத தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கார்த்திகேய சுவாமி கோவில் என்ற குரோன்ட் பர்வத் கோவில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த மலை பார்ப்பதற்கு ஓம் என்ற பிரணுவ வடிவத்தில் காட்சியளிக்கிறது என்பதால் இதை ஓம் மலை என்றும் சொல்கிறார்கள். ஆனால் இக்கோவில் குறித்து பெரிதாக மக்களுக்கு தெரியவில்லை. இதனை தமிழக பக்தர்களுக்கு தெரியப்படுத்த உத்தரகாண்ட் அரசு முயற்சி செய்து வருகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News